Monday, July 6
Shadow

பஞ்சராஷாரம் – திரைவிமர்சனம் (அனைவரும் பாருங்க) Rank 4.75/5

தமிழ் சினிமாவில் சில சமயங்களில் உலக தரத்துக்கு படங்கள் வரும் அது எப்போதாவது ஒரு முறை தான் வரும் ஆம் அப்படிப்பட்ட ஒரு படம் தான் பஞ்சராஷாரம்

படத்தின் மிக அனைத்து துறையினரும் மிக சிறந்த உழைப்பை கொடுத்து உள்ளனர். வித்தியாசம் வித்தியாசம் என்ற வார்த்தைக்கு முழுமையான ஒரு படம் என்று சொல்லும் படம் அறிமுக இயக்குனர் பாலாஜி வைரமுத்து நம்மை பிரமிக்க வைத்துள்ள ஒரு படம் கதையும் கதாபாத்திரங்கள் அமைந்தால் மற்ற விஷயங்கள் பலம் கொடுக்காமல் போகும் ஆனால் மிக சிறந்த கதை பலமான அழ்ந்த திரைகதை மெய்சிலிர்க்கும் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மயிர்கூச்சரிக்கும் ஒளிப்பதிவு முழுமையான நட்சத்திரங்கள் அனுபவம் குறைந்த நட்சத்திரம் ஆனால் பிரமிக்க வைக்கும் நடிப்பு நம்மை கதைக்குள் சுண்டியிழுக்கும் நடிப்பு

இப்படி ஒவ்வொரு விஷயமும் நம்மை திகைக்கவைத்துள்ளனர். நம் எண்ணங்கள்தான் நம் வாழ்வின் பிரதிபலிப்பு என்பதை சொல்லும் படம் ஒரு சிலர் சொல்லும் பல நல்ல விஷயங்களை விட்டு விட்டு ஒரு கெட்ட விஷயம் சொல்லுவார்கள் நாம் நல்ல விஷயத்தை மறந்து விட்டு அவர் சொன்ன கெட்ட விஷயத்தை தான் நம் மனதில் போட்டு குழப்பி கொள்வோம் அது தான் இந்த படத்தின் கதை சுருக்கம்

பஞ்சபூதத்தின் அடிபடியிலும் இந்த கதை அமைப்பு இருக்கு என்றும் சொல்லலாம் ஆம் ஐந்து பேர்  ஒரு வித்தியாசமான இசை நிகழ்வில் சந்திக்கிறார்கள் அங்கு தான் அவர்களுக்கு குள் அறிமுகம் கிடைக்கிறது ஆனால் பல வருட நட்புகள் போல பழகுகிறார்கள் ஆதில் ஒரு பெண் மட்டும் பயப்படுகிறாள் முன் பின் தெரியாத நபர்களுடன் எப்படி பழகுவது என்று அங்கு ஜீவித்தா என்ற பெண் நம்பிக்கை தான் வாழ்கை நம்புங்கள் என்று அனைவரும் சுற்றுலா கிளம்புகிறார்கள் அங்கு அவர்கள் தாங்கும் விடுதில் ஒரு விளையாட்டு விளையாடுகிறார்கள் அந்த விளையாட்டு அவர்களின் வாழ்கையை மாற்றுகிறது அதாவது அந்த விளையாட்டில் நடந்த சம்பவங்கள் உண்மையாக நடக்கிறது.

அந்த விளையாட்டில் வந்த வார்த்தைகள் உண்மையாக நடக்க இவர்கள் மீண்டும் ஒன்றாக இணைகிறார்கள் இந்த விளையாட்டு எங்கு விபரிதம் ஆகிவிடுமோ என்று பயப்படுகிறார்கள். ஆனால்ஒரு பெண் மட்டும் இல்லை நாம் அன்று நடந்த விஷயங்களை நம் மனதில் போட்டு குழப்பி கொண்டதால் தான் நமக்கு அப்படி ஒரு எண்ணம் வருகிறது என்று சொல்ல மற்றவர்களும் அதை நம்பி செல்கின்றனர். ஆனால் அது ஒரு கட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கிறது அனைவரும் இந்த விளையாட்டில் வந்த விஷயங்கள் நடக்கிறது இதனால் மிக பெரிய பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த பாதிப்பில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் அவர்களுக்கு ஏற்பட்ட பதிப்புகளில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது தான் மீதி படம்.

காட்சிக்கு காட்சி நம்மை மிரட்டி இருக்கிறார்கள் அனைவரும் குறிப்பாக இயக்குனரும் ஒளிப்பதிவாளர் யுவாவும் படத்தின் மிக பெரிய பலம் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் மற்றும் கலை இயக்குனரும் அப்படி ஒரு காட்சியமைப்பு இயக்குனரின் என்னத்துக்கு அப்படி ஒரு உழைப்பை கொடுத்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர் என்று சொன்னால் மிகையாகது

படத்தில் நடித்த அனைவரும் மிக சிறந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர் குறிப்பாக வில்லனாக நடிக்கும் சீமான் படத்துக்கு மிக பெரிய பலம் மற்ற அனைவரும் படம் முழுக்க வந்தாலும் இரண்டாம் பாகத்தில் வரும் வில்லன் சீமான் நம்மை மிரத்துகிறார் நடிப்பில் மட்டும் இல்லை தோற்றத்திலும்

அதேபோல ஜீவித்தா வரும் அறிமுகநடிகை ஹரிணி நடிப்பில் நம்மை கவருகிறார். நடிப்பில் இவர்கள் இருவர் மட்டும் இல்லை அனைவரும் நம்மை மிரட்டுகிறார்கள். சந்தோஷ் பிரதாப், கோகுல், மது ஷாலினி சன அல்டாப், ஜீவா ரவி, அஸ்வின் ஜெரோம், ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர் எல்லோரும் தன் பங்கை மிக சிறப்பாக செய்துள்ளனர் யாரும் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை மிக அழகாக நடித்துள்ளனர்.

படத்தின் மிக பெரிய பிளஸ் இயக்குனர் பாலாஜி வைரமுத்து தான் இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் என்று தான் சொல்லணும் இந்த மாதிரியான திறமைசாலிகளை நாம் ஊக்கபடுத்தி வழிநடத்தவேண்டும் இது நம் கடமை இதன் மூலம் தமிழ் சினிமா தான் செழிப்பாக இருக்கும் இவரின் தொழில் நுட்ப தேர்வு படத்துக்கு வாவ் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது குறிப்பாக கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையும் சரி பின்னை இசையும் படத்துக்கு உயிர் கொடுக்கிறது யுவா ஒளிப்பதிவு தமிழ் சினிமாவுக்கு புதுமை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது.

இப்படி பட்ட படங்களை நாம் நிச்சயமாக வெற்றியடைய செய்யவேண்டும் இந்த படத்தை அனைவரும் திரையரங்கம் சென்று பார்த்தி வெற்றியடைய செய்யுங்கள்.