

தமிழ் சினிமாவின் புதுவரவு இயக்குனர் ஹலிதா ஷமீம் இவரின் இயக்கத்தில் நாளை வெளியாக இருக்கும் படம் தான் சில்லுக்கருப்பட்டி .உங்கள் அபிமான திரையங்குகளில் நாளை வெளியாகும் இந்த படம் .
நகர வாழ்வியலின் சுவாரிசயமான நிகழ்வுகளின் நான்கு கதைகளின் திரட்டாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
பிங் பேக்,டார்டில்ஸ் காக்கா கடி ,ஹெய் அம்மு என்று நான்கு வெவ்வேறு வயதுடைய மனித சமகால வாழ்வை யதார்த்தமாகவும் சுவாரிசியமாகவும் காட்சிபடுத்தியிருகிறார்.

ஹெய் அம்முவில் சமுத்திரகனி மூன்று குழந்தைகளுக்கு தந்தையாகவும் சமகால இல்லறவாழ்வில் இயங்கும் சக ஆண்களின் பிரதிபலிப்பாக தனது யதார்த்த நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்.
சுனைனா நகரமயமாதாலளின் வெளிப்பாடாக குடும்ப சுழலில் சிக்கிகொண்ட உணர்வு உள்ள இயந்திரமாக திருமணமான பெண்கள் பார்க்கபடுகிரார்கள் என்பதை தன் நடிப்பில் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். அவர்களுக்கும் ஆபாசங்கள் இருக்கிறது என்பதை இன்றைய தொழில்நுட்ப உதவியுடன் மிகவும் யதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
