
பொங்கலுக்கு வெளியான படங்கள் பேட்ட மற்றும் விஸ்வாசம் இந்த இரண்டு படங்களும் நூறு கோடி வசூலை தாண்டியது என்று பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் . உண்மையில் படத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனங்களும் சரி வாங்கி வெளியிட்ட விநியோகிஸ்தர்கள் என்ன நடந்தது உண்மை நிலவரம் பார்ப்போம்
ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’, அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் ஒரு வாரத்திற்கு முன்பு ஜனவரி 10ம் தேதி வெளியாகின. வெளியான நாளிலிருந்தே எந்தப் படம் அதிக வசூலைப் பெற்று வருகிறது என்பதில் கடும் போட்டியும், சர்ச்சையும் இருந்து வருகிறது.
‘பேட்ட’ தமிழ்நாடு வசூல் வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் 100 கோடி கடக்கும் என்றும், ‘விஸ்வாசம்’ வசூல் நேற்றோடு 125 கோடி வசூலைக் கடந்துவிட்டது என்றும் அந்தந்தப் படங்களின் வினியோகஸ்தர்கள் அறிவித்துள்ளார்கள்.ஆனால், அந்த இரண்டு கணக்குகளுமே உண்மையல்ல என்று திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறுகையில், “இரண்டு படங்களுக்குமாக அவர்கள் சொன்ன கணக்கு சாத்தியமில்லாத ஒன்று. இரண்டு படங்களும் வெளிவந்த நாளிலிருந்தே நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் சொன்ன வசூல் தொகையான 100 கோடி, 125 கோடி என்பது அதற்குள் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்கு இன்னும் நாட்கள் ஆகும். பொங்கல் விடுமுறை முடிந்து இன்று கூட இரண்டு படங்களும் பல தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே இருக்கிறது. நாளையும், நாளை மறுநாளும் ஆன்லைன் புக்கிங் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படங்கள் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது பற்றி வரும் திங்கள் கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து நான் அறிவிக்க உள்ளேன்,” என்கிறார். இதில் அதிக பொய் பிரச்சாரம் செய்து வருபர் அஜித் மேலாளர் தான் இவர் இணையதளங்களில் காசு கொடுத்து அதிக பிரச்சாரம் செய்து வருகிறார் என்று ஒரு தரப்பு குற்றசாட்டு உள்ளது.
