Friday, May 1
Shadow

மோதும் ரஜினியின் பேட்ட தலையின் விஸ்வாசம் வசூல் சண்டை உண்மை நிலவரம்

பேட்ட விஸ்வாசம் இந்த இரண்டு படங்கள் பொங்கல் ஒரே நாளில் வெளியானதில் பல பிரச்சனைகள் அது ரசிகர்களுக்கு மட்டும் இல்லை தயாரிப்பளர்களுக்கும் தான் இரண்டு தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களால் மாறி மாறி சோசியல் மீடியாவில் அறிவிப்புகள் கொடுத்து வருகின்றனர் . குறிப்பாக அஜித் ரசிகர்கள் இல்லை ஒரு சில கை கூலிகள் வாங்கிய பணத்துக்காக வரும் வசூல் வதந்திகள் அதிகமாக ஆகிவிட்டது இது ஒரு பக்கம் இருக்க ஒரு வினியோகிஸ்தர் அவர் ரஜினிகாந்த் விஸ்வாசி என்பதால் அவர் ஒரு ஆடியோ செய்தியை விட்டு அவர் பக்கத்துக்கு ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டுவிட்டார்  இதனால் பல பிரச்னைகள்  இரண்டு ரசிகர்களும் இணையதளங்களில் சண்டை போட்டு கொள்ளகின்றனர் .

 

ஒரே நாளில் ‘பேட்ட, விஸ்வாசம்’ இரண்டு படங்களும் வெளிவருவது தேவையற்ற சிலபல மோதல்களுக்கு வழிவகுக்கும் என திரையுலகில் எதிர்பார்த்தது போலவே நடந்துவிட்டது. இந்த மோதல் படம் வெளியான முதல் நாளிலிருந்தே ஆரம்பமானது.

 

‘விஸ்வாசம்’ படத்தின் முதல் நாள் தமிழ்நாடு வசூல், ‘பேட்ட’ படத்தை விட அதிகம் என செய்திகள் வெளிவந்தன. ஆனாலும், தொடர்ந்து ‘விஸ்வாசம்’ படம்தான் அதிக வசூலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ‘பேட்ட’ படத்தின் வசூலுக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என டுவிட்டரில் பலர் தொடர்ந்து கருத்துக்களைப் பரப்பி வந்தார்கள்.

 

‘பேட்ட’ தரப்பில் அந்தப் படத்தின் பிஆர்ஓ மூன்று தினங்களுக்கு முன்பு அவருடைய டுவிட்டர் கணக்கில், “தமிழ்நாட்டில் 600க்கும் அதிகமான தியேட்டர்கள் ‘பேட்ட’ படத்திற்கு உள்ளது. இரண்டாவது நாளில் இன்னும் அதிகமான தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது,” என ஒரு பதிவை வெளியிட்டார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ‘விஸ்வாசம்’ படத்தின் தமிழ்நாடு வினியோகஸ்தர் கேஜேஆர் ஸ்டுடியோஸ், “தமிழ்நாடு மக்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் உண்மை தெரியும். ஏன் நீங்கள் தேவையில்லாத போட்டியையும், சண்டையைம் உருவாக்குகிறீர்கள். தமிழ்நாடு பாக்ஸ்ஆபிஸ் வசூல் என்ன என்பதைப் பாருங்கள் தெளிவு கிடைக்கும்,” என கருத்து தெரிவித்தார்கள்.

 

இரண்டு நாட்கள் கழித்து ‘பேட்ட’ தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் தரப்பில், “டிராக்கர்ஸ் என்று அழைக்கப்படுபவர்களே, தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான ‘பேட்ட’ படத்தின் வசூல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக எங்களுக்கே இன்னும் வராத நிலையில் நீங்கள் எப்படி உறுதியாக வசூல் விவரங்களைத் தெரிவிக்கிறீர்கள். ரசிகர்களே, இரண்டு படங்களுடன் பொங்கலைக் கொண்டாடுங்கள். தவறான பரப்புரையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்,” என நேற்றிரவு டுவிட் செய்திருந்தார்கள்.

 

அதற்கு டுவிட்டரில் பொய்யான வசூலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் சிலர் உடனே கோபமடைந்து ‘சர்கார்’ பட வெளியீட்டு சமயத்தில் நாங்கள் சொன்னதையும் நீங்கள் செய்தியாக்கினீர்களே என பதில் தெரிவித்திருந்தார்கள். இந்தச் சண்டை நடு இரவில் கடுமையாக நடந்து வந்தது.

 

‘விஸ்வாசம்’ படத்திற்காக பலருக்குப் பணம் கொடுத்து பொய்யான வசூல் நிலவரத்தை வெளியிட்டு, ‘பேட்ட’ படத்தைவிட ‘விஸ்வாசம்’ படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாகக் காட்டுகிறார்கள் என ரஜினி ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ‘விஸ்வாசம்’ படத்தை சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தும் ஏஜென்சி ஒன்றின் வாட்சப் செய்தியையும் அவர்கள் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்கள். அதில் கடைசி வரியில், “கேஜேஆர் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்திற்கு அஜித் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்,” என டுவிட் போடச் சொல்லியிருக்கிறார்கள்.

 

‘விஸ்வாசம்’ படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட நிறுவனம் எது என பல ரசிகர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்கையில், எப்படி அப்படி ஒரு பொய்யான தகவலை, எந்த ரசிகர்கள் சொன்னார்கள் என்பதை ஆதாரத்துடன் காட்டுவார்களா என்றும் ரஜினி ரசிகர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

 

‘விஸ்வாசம்’ படத்தை வெளியிட்டுள்ள கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், கடந்த வருடம் ‘குலேபகாவலி’ படத்தை வெளியிட்ட போது இதே வசூல் விவரங்களை டுவிட்டரில் வெளியிட்டவர்களைக் கடுமையாகத் திட்டி பதிவு ஒன்று போட்டதையும் பலர் நேற்று ஷேர் செய்திருந்தார்கள். அன்று டிராக்கர்களைத் திட்டியவர்களுக்கு, இன்று அவர்கள் இனிக்கிறார்களா என்றும் கேள்வி வருகிறது.

 

ஆக, திரைப்படங்களின் வசூல் விவரங்கள் என்ன என்பதை சம்பந்தப்பட்ட சில தயாரிப்பு நிறுவனங்களே பொய்யாகக் கொடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவது இதிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

 

தங்களுக்குத் தேவைப்படும் போது விளம்பரப்படுத்திக் கொள்வதும், தங்களுக்கு எதிராக வரும் போது அதை எதிர்ப்பதும் பலர் வழக்கமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

‘சர்கார்’ படத்திற்குப் பிறகு விஜய் ஊடகத்தினரைச் சந்தித்து பரிசு வழங்கியதைக் கிண்டலடித்த அஜித் ரசிகர்கள், இப்போது ‘விஸ்வாசம்’ படக்குழுவினர் பணம் கொடுத்து வசூல் விவரங்களை பொய்யாக வெளியிடுவது குறித்து என்ன சொல்லப் போகிறார்கள் என விஜய் ரசிகர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

 

“சமூக வலைத்தளங்களில் வரும் எந்த ஒரு வசூல் விவரங்களும் உண்மையல்ல. எந்தப் படத்தின் டிரென்டிங்கும் வசூலை உயர்த்த உதவவே உதவாது. ஒரு படத்தைத் தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளருக்கே அவர்களது படங்களின் உண்மை வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வராது. எந்த வினியோகஸ்தரும், தியேட்டர்காரர்களும் உண்மை வசூல் தொகை என்ன என்பதைச் சொல்லவே மாட்டார்கள். மேலும், இந்த பொங்கல் போட்டியில் உள்ள ‘விஸ்வாசம்’ படத்திற்கு பல அதிகாலை 1 மணி சிறப்பு காட்சிகளுக்கு 1 டிக்கெட்டின் விலை 1000 ரூபாய் வரை விற்கப்பட்டது. அரசு அனுமதி அளிக்காத அந்தக் கட்டணங்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் உண்மையைச் சொல்வார்களா ?. மற்ற தொழில்களைப் போலவே சினிமாவிலும் வரவர நேர்மை குறைந்துவிட்டது,” என்று குறைபட்டுக் கொள்கிறார் பெயர் சொல்ல விரும்பாத வினியோகஸ்தர் ஒருவர்.