Thursday, September 10
Shadow

பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன் பிறந்த தின பதிவு

திருச்சி லோகநாதன் தமிழ்த் திரைப்பட முதல் பின்னணிப் பாடகர். பல திரையிசைப் பாடல்களைப் பாடியவர்.

திருச்சி மலைக் கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியைக் குறிப்பதாகும்.

நடராஜன் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். சிறுவயதில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.

இவர் பாடிய முதல் திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத் தொடங்கும் பாடல், எம். ஜி. ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஜி. ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார்.

இவரது இரண்டாவது பாடல்: மு. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான அபிமன்யு (1948) திரைப்படத்தில் இடம்பெற்ற இனி வசந்தமாம் வாழ்விலே என்ற பாடல்.

திருச்சி லோகநாதன் பாடிய பாடல்கள் இடம் பெற்ற படங்கள்: மாயா பஜார், தை பிறந்தால் வழி பிறக்கும், வண்ணக்கிளி, கப்பலோட்டிய தமிழன், மந்திரி குமாரி, பானை பிடித்தவள் பாக்கியசாலி, குலேபகாவலி, டவுன்பஸ்