Thursday, September 10
Shadow

Tag: பின்னணி

பின்னணி திரைப்பட பாடகி ஏ. பி. கோமளா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஏ. பி. கோமளா தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். 1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார். ஜி. ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். வி. வெங்கட்ராமன், ம. சு. விசுவநாதன், சி. எஸ். ஜெயராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு, டி. ஆர். பாப்பா, வெ. தட்சிணாமூர்த்தி, ஜி. தேவராஜன் போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார். பெண் மனம், தங்கப்பதுமை, தங்கமலை ரகசியம், மாமியார் மெச்சின மருமகள்‎, பொம்மை கல்யாணம், எங்கள் குடும்பம் பெரிசு, ஸ்ரீ வள்ளி, தாமரைக்குளம் ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன....

பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
திருச்சி லோகநாதன் தமிழ்த் திரைப்பட முதல் பின்னணிப் பாடகர். பல திரையிசைப் பாடல்களைப் பாடியவர். திருச்சி மலைக் கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியைக் குறிப்பதாகும். நடராஜன் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். சிறுவயதில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார். இவர் பாடிய முதல் திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத் தொடங்கும் பாடல், எம். ஜி. ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஜி. ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார். இவரது இரண்டாவது பாடல்: மு. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான அபிமன்யு (1948) திரைப்படத்தில் இடம்பெற்ற இனி வசந்தமாம் வாழ்விலே என்ற பாடல். திருச்சி லோகநாதன் பாடிய பாடல்கள் இடம் பெற்ற படங்கள்: மாயா பஜார், தை பிறந்தால் வழி பிறக்கும...
பின்னணி பாடகர் ஏ. எம். ராஜா பிறந்த தின பதிவு

பின்னணி பாடகர் ஏ. எம். ராஜா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஏமல மன்மதராஜு ராஜா சுருக்கமாக ஏ. எம். ராஜா தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது மனைவி பிரபலப் பாடகி ஜிக்கி. ராஜா ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் மன்மதராஜு, லட்சமம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மூன்று வயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பா கல்லுரியில் பிஏ (இளங்கலை) முடித்தார். இசையார்வம் கொண்ட ஏ. எம். ராஜா கர்னாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தார். கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கி பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாள...

பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் பிறந்த தின பதிவு

Birthday, Latest News
மலேசியா வாசுதேவன் ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகரும் நடிகரும் ஆவார். எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர். கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் - அம்மாளு தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார் வாசுதேவன். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார் மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்தார். திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார். இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார். மலேசியா வாசுதேவன் அன்னப்பூரணி (உஷா வாசுதேவன்) ௭ன்ற பெண்ணை 26 சனவரி மாதம் 1976-இல் திருமணம் செய்த...
பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பிறந்த தின பதிவு

பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
  ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது. இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது. 1960...

இந்திய பின்னணி பாடகர் டி. எல். மகாராஜன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
டி. எல். மகராஜன் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர்.  இவரின் பெற்றோர், புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன் – ராஜலக்சுமி ஆவர். தனது 10ஆவது வயதில் வள்ளலார் எனும் நாடகத்தில் மகராஜன் முதன்முதலாகப் பாடினார். தனது 12ஆவது வயதில் திருவருட்செல்வர் திரைப்படத்தில் காதலாகிக் கசிந்து… எனும் பாடலை பின்னணியில் பாடினார். திரைப்படங்களில் குறைந்த அளவில் பாடியுள்ள மகராஜன், நிறைய பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய பக்திப் பாடல்கள் தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.  டி. எல். மகராஜன் தமிழ் இசைக்கலைஞர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். தொலைக்காட்சிகளில் இடம்பெறும் பாடலிசைப் போட்டிகள் பலவற்றில் நீதியரசராக செயலாற்றி வருகிறார்.. மகாராஜன் ஒரு பக்தி பாடகர் பெரும்பாலும் பக்தி பாடல்கள் பாடுகிறார். எப்போதாவது அவர் திரைப்பட இசைக்கு பாடுகிறார். பின்னணி பாடகராக அவரது “கதாம் சே...