Monday, December 9
Shadow

முன்னணி நடிகரை இயக்கும் பிரபுதேவா- ஆனால் அஜித் இல்லை பின்னர் யார் ?

தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்த பிரபுதேவா ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார் ஆனால் நடிப்பு அவரை விடவில்லை மீண்டும் அவரை தேவி படம் ஹீரோவாக வள வந்து வெற்றி கொடிநாட்டினார். இதை தொடர்ந்து பல படங்கள் நடித்து கொண்டு இருக்கிறார் தற்போது மீண்டும் இயக்கம் என்று சொன்னார் அதுவும் தல அஜித் என்று பேசப்பட்டது ஆனால் அதற்கு ஒரு விடை கொடுத்துள்ளார் பிரபுதேவா.

பிரபு தேவா தமிழில் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்து மெர்குரி என்ற திகில் படம் வெளியாக இருக்கிறது, படத்திற்கான டீஸரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கடந்த சில நாட்களாக பிரபு தேவா அடுத்து அஜித்தை வைத்து படம் இயக்க போகிறார் என்று நிறைய தகவல்கள் வந்துவிட்டது. அவர் நிஜமாக ஒரு புதிய படம் இயக்குகிறார், ஆனால் தமிழில் இல்லை பாலிவுட்டில்.

சல்மான் கான், சோனாக்ஷியை வைத்து தான் புதிய படம் இயக்குகிறாராம். அர்பாஸ் கான் தயாரிக்கும் இப்படம் பற்றிய வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.