Sunday, April 19
Shadow

புலி முருகன் – திரை விமர்சனம் (வீரன் விவேகமானவன்) Rank 4/5

தமிழ் சினிமாவில் பொதுவாக பல டப்பிங் படங்கள் வாரம் வாரம் ரிலீஸ் ஆகிறது ஆனால் ஒரு சில படங்கள் தான் மிக பெரிய வெற்றியடைகிறது அந்த வகையில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற படம் என்றால் அது பாகுபலி 2 கிட்டத்தட்ட தமிழில் மட்டும் நூறு கோடி வசூல் செய்து சாதனை செய்த ஒரே டப்பிங் படம் என்று சொல்லலாம் முன்பு நிறைய டப்பிங் படங்கள் வெளியாகும் அதில் பல படங்கள் வெற்றியடையும் ஆனால் இப்போது அப்படி இல்லை நூறு படங்கள் வெளியாவதில் ஒரு சில படங்கள் தான் வெற்றி பெரும் அந்த வகையில் இந்த வாரம் வெளியாகிருக்கும் படம் புலி முருகன்

இந்த படம் முதன் முதலில் மலையாளத்தில் அதிக பொருள் செலவில் உருவான படம் இது தான் இந்த படத்தை எதை நம்பி இவ்வளவு பெரிய தொகையை தயாரிப்பாளர் முதல் செய்தார் என்றால் அது இந்த படத்தின் கதையும் நடிகரும் தான் மோகன் லால் என்ற ஒரு மனிதனை நம்பி முதலீட்டு செய்த படம் இந்த படம்
மலையாளத்தில் இந்த படம் வசூலில் சாதனை செய்த முதல் படம் என்று சொன்னால் மிகையாகது ஆம் கேரளாவில் நூறு கோடி வசூல் செய்த படம் இது தான் இந்த சாதனையை யாராலும் மீண்டும் செய்யமுடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியாது என்று தான் சொல்லணும் சரி வாங்க இந்த படத்தை பற்றி பாப்போம்

மோகன்லால்,லால், கமலினி முகர்ஜி ஜெகபதி பாபு, கிஷோர், ஷிஜாஸ், நமீதா, பாலா,தாஜ் அமீர், மற்றும் பலர் நடிப்பில் ஷாஜி குமார் ஒளிப்பதிவில் கோபி சுந்தர் இசையில் சிநேகன் மற்றும் ஆர்,பி.பாலா பாடல்கள் எழுத இப் படத்தின் இயக்குனர் வைசாக் இயக்கதில் பீட்டர் ஹெயன்யின் சண்டை பயிற்சியில் உருவான படம் இந்த புலி முருகன் இந்த படத்தை தமிழாக்கம் பண்ணது ஆர்,பி.பாலா சரி படத்தின் கதையை பார்ப்போம்

வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமம் புலியூர். காட்டுக்குள் இருந்து இந்த கிராமத்திற்குள் வரும் புலி, மக்களை தாக்கி கொல்கிறது. மோகன்லால் சிறுவயதில் இருக்கும்போது அவரது தந்தையை அந்த புலி கொன்றுவிடுகிறது. ஏற்கெனவே, தாயை இழந்து நிற்கும் மோகன்லால் தனது தந்தையையும் இழந்ததால் ஊர் மக்களிடம் தனது தம்பியை ஒப்படைத்துவிட்டு புலியை கொல்ல காட்டுக்குள் போகிறார். புலியையும் வேட்டையாடி கொன்று விடுகிறார்.

அன்றுமுதல் சாதாரண முருகனாக இருந்த மோகன்லால் புலிமுருகனாக உருவெடுக்கிறார். அதேபோல், காட்டை சுற்றியுள்ள எந்தவொரு கிராமத்திலும் புலியால் ஆபத்து ஏற்பட்டால் மோகன்லால் வேட்டையாடி ஊரை பாதுகாத்து வருகிறார். வளர்ந்து பெரியவனானதும் ஒருநாள் மோகன்லால் தம்பியின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு இரண்டு பேர் காட்டுக்குள் கஞ்சா செடியை பறித்துக் கொண்டு செல்வதற்காக வருகிறார்கள். கேன்சரை குணமாக்கும் மருந்துக்கு அது தேவைப்படுவதாகவும், அதற்கு மோகன்லாலின் உதவி தேவை என்றும் அவரிடம் வருகிறார்கள். மோகன்லாலும் அவர்களுக்கு உதவுவதாக கூறிவிட்டு, கஞ்சா செடிகளை பறித்துக் கொடுக்கிறார்.

கஞ்சா செடிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது போலீஸ் இவர்களை சுற்றி வளைக்கிறது. அவர்களை தாக்கிவிதாக்கிவிட்டு மோகன்லால் தனது மனைவி கமாலினி முகர்ஜி மற்றும் குடும்பத்துடன் லாரியில் ஏறி தப்பித்து ஜெகபதிபாபுவிடம் அடைக்கலம் தேடிப் போகிறார்கள். ஆரம்பத்தில் ஜெகபதி பாபுவை நல்லவர் என்று நம்புகிறார் மோகன்லால். ஜெகபதி பாபுவையும் ஒரு பிரச்சினையில் இருந்து மோகன்லால் காப்பாற்ற, மோகன்லால் மீது ஜெகபதி பாபுவுக்கும் நல்ல மதிப்பு உருவாகிறது.

ஒருகட்டத்தில் மோகன்லால் ஜெகபதிபாபுவை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அது எதனால்? அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

இந்திய சினிமாவில் மிக சிறந்த நடிகர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ள நடிகர் என்று சொன்னால் அது மோகன்லால் என்று தான் சொல்லணும் புலி முருகன் வேடத்தில் அவர் புலியாக தான் தெரிகிறார் காட்சிக்கு காட்சி அப்படி ஒரு நடிப்பு மலையாளத்தில் அவருக்கு கொடுத்து இருக்கும் பட்டம் முழுமையான நடிகர் என்ற பட்டம் அவருக்கு தான் பொருந்தும் காதல் பாசம் புலி வேட்டை சண்டை காட்சிகள் இவை அனைத்திலும் ஒரு நடிகன் மிக சிறப்பாக செய்துள்ளார் என்றால் அது இவர்தான் அதிலும் கிளைமாக்ஸ் சண்டையில் இந்த வயதில் அம்மாடி என்று சொல்லும் அளவுக்கு மிரட்டியுள்ளார்

மோகன்லால் மாமாவாக வரும் லால் அவரும் நானும் சோடை போகவில்லை என்று போட்டி போட்டு நடித்துள்ளார், நாயகியாக கமலினி முகர்ஜி அவரும் மோகன்லால் நடிப்புக்கு இணையாக நடித்துள்ளார்.

படத்தில் வில்லன் ஜெகபதி பாபு எப்பவும் போல அவர் நடிப்பில் மிக அழகாக நடித்துள்ளார் மோகன்லால்வுடன் போட்டி போடும் வில்லனுக்கு தகுதியும் திறமையும் உள்ளது என்று நிருபித்துள்ளார்.

படத்தின் மிக பெரிய பலம் என்றால் அது படத்தின் இயக்குனர் மற்றும் கதை திரைகதை என்று சொல்லணும் குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வடிவமைத்த பீட்டர் ஹெயன் மற்றும் இயக்குனரை எப்படி பாரட்டுவது என்று தெரியவில்லை

படத்தின் மிக பெரிய பலம் என்றால் அது இந்த படத்தின் சண்டை காட்சிகள் தான் என்று சொல்லணும் இந்த படத்தின் சண்டைகாட்சிகளை பார்த்து முதல் முறையாக தேசிய விருது கமிட்டி இந்த படத்துக்காக முதல் முறை சிறந்த சண்டை பயிற்சியாளர் விருது கொடுக்கப்பட்டது, இந்த பெருமை சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் அவரை தான் சாரும்

இந்த படத்தை எந்த அளவுக்கு மலையாளத்தில் சிரமப்பட்டு எடுத்தார்களோ அந்த அளவுக்கு தமிழ் மொழி மாற்றம் செய்துள்ளார் ஆர்.பி.பாலா இது மலையாள டப்பிங் படமா இல்லை நேரடி தமிழ் படமா என்று சொல்லும் அளவுக்கு மிக சிறந்த முறையில் டப்பிங் செய்துள்ளார். என்று தான் சொல்லணும்

சின்ன வயது புலி முருகனாக நடித்துள்ள ஷிஜாஸ் சிறுவன் நடிப்பில் மோகன் லால் நடிப்பை அப்படியே பார்க்க முடிந்தது

மொத்தத்தில் புலி முருகன் வீரன் விவேகமானவன் Rank 4/5

Leave a Reply