Sunday, March 16
Shadow

நடிகர் விஜய்யை பற்றி ஆர்.ஜே. பாலாஜி சொன்ன புதிய தகவல்

ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி காமெடி நடிகர். இவர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்த இவன் தந்திரன் படம் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் குறித்து பேசும் போது ‘விஜய் சார் சமீப காலமாக தமிழகத்தில் மட்டுமின்றி நாட்டில் நடக்கும் பல விஷயங்களுக்கு தன் குரலை பதிவு செய்கின்றார்.

தன் வாக்கை வேத வாக்காக நினைக்கும் ரசிகர்களுக்கு நிறைய நல்ல கருத்தை சொல்கின்றார், மேலும், பல ரசிகர்களை நேரில் சந்திக்கின்றார்.

குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவுகின்றார், சமீபத்தில் அவருடன் நான் மேடையில் இருந்த போது விவசாயம் குறித்து அவர் பேசியது ரசிக்க வைத்தது’ என கூறியுள்ளார்.

Leave a Reply