Saturday, April 18
Shadow

விஜய்யை… பாராட்டிய ராகவா லாரன்ஸ்!

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. மாணவர்களுக்கு ஆதரவாக திரையுலக பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் விஜய் கூட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், “எதையும் எதிர்பாக்காமல் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் கட்சி பேதமின்றி தமிழன் என்கிற ஒரே உணர்வுடன் போராட்டத்தில் குதித்துள்ள அத்தனை இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். இத்தனை பிரச்னைக்கும் காரணமாக இருப்பவர்களை நாட்டை விட்டே அனுப்’பீட்டா’ தமிழ்நாடே சந்தோஷப்படும்” என்றார்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்காக போராடும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ், விஜய்யை வெகுவாக பாராட்டியிருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் வெளியிட்ட வீடியோவை ஷேர் செய்து ‘வெரி குட் நண்பா’ என்று பாராட்டியுள்ளார். மேலும் மெரினா கடற்கரையில் தொடர்ந்து போராடி வருபவர்களின் உணவு, நீர், மருந்து செலவுக்காக ரூ. 1 கோடி வரை செலவு செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

Leave a Reply