Monday, June 22
Shadow

ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா”

தமிழ் சினிமாவில் இன்று பேய் சீசன் அதற்கு அடிக்கல் நாட்டிய பெருமை ராகவா லாரன்ஸ்யை தான் சேரும் முனி படம் மூலம் தான் பேய் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வர ஆரம்பித்த்து எத்தனை படங்கள் வந்தாலும் ராகவா லாரன்ஸின் சாதனையும் வெற்றியும் யாருக்கும் கிடைக்கவில்லை என்று தான் சொல்லணும் அதிலும் குறிப்பாக காஞ்சனா வெற்றி மிக பெரிய வெற்றி அதன் பின் காஞ்சனா இரண்டு பாகம் பவந்து மேலும் மிக பெரிய வெற்றியை தந்தது.

மாபெரும் வெற்றி பெற்ற முனி 3 காஞ்சனா 2 படத்திற்கு பிறகு தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் படம் முனி 4 காஞ்சனா 3..

இந்தப் படம் வெளி வந்த பிறகு தனது அடுத்த படமாக ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிக மிக பிரமாண்டமாக தயாராகும் “கால பைரவா “படத்தின் வேலைகளை தொடங்குகிறார் ..கால பைரவா படத்தை இயக்கி நடிக்கும் லாரன்ஸ் காஞ்சனா 3 க்கு பிறகு கால பைரவா படத்தை வெளியிட உள்ளார்..

இதைத் தவிர இன்னும் 2 கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கும் லாரன்ஸ் அது பற்றிய தகவல்களை மார்ச் மாதம் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்..

Leave a Reply