Thursday, March 12
Shadow

விஜய் அமைக்கும் புதிய வெற்றி கூட்டணி அடுத்த இயக்குனர் யார் தெரியுமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமில்லாமல் வருங்கால சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் தளபதி விஜய் தொடர் வெற்றி வசூல் சக்கரவர்த்தி என்று இந்திய சினிமாவும் புகழ் பெற்றவர் இவர் ஒரு கதை மற்றும் இயக்குனர் தேர்வு செய்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை அந்த இயக்குனர் நிச்சயம் சாதிக்க கூடிய அத்தனை திறமைவாய்ந்த இயக்குனராக தான் இருப்பர் அதோடு இவரின் தேர்வும் ஜோடை போனதில்லை அந்த வகையில் விஜய் அடுத்து கூட்டணி வைக்கப்போகும் இயக்குனர் யார் தெரியுமா

சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களின் இயக்குநர் வினோத்தை அழைத்துப் பேசியுள்ளார் விஜய். இதனால் இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டித் தப்பிக்கும் ஒரு கொள்ளைக் கும்பலைப் பிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதையை உண்மையும் அழுத்தமுமாகச் சொன்ன ‘தீரன் அதிகாரன் ஒன்று’ படத்தை விமர்சகர்கள், போலீஸ் அதிகாரிகள் என அனைவரும் பாராட்டினர்.

இந்நிலையில், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை சமீபத்தில் பார்த்த விஜய், இயக்குநர் வினோத்தை அழைத்துப் பேசியிருக்கிறார். வினோத்திடம் படம் குறித்தும், அதன் திரைக்கதை குறித்தும் சிலாகித்துப் பேசியவர், ‘நாம் இணைந்து ஒரு படம் பண்ணலாம், நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்’ என்று விஜய் கூறியிருக்கிறார். இதனால் விஜய்க்கான கதையை உருவாக்குவதில் வினோத் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அநேகமாக விஜய்யின் 63-வது படத்தை வினோத் இயக்க வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Leave a Reply