Sunday, April 19
Shadow

போஸ்டரின் மூலம் சர்ச்சையை கிளப்பிய ரஜினி படம்

ரஜினியின் தீவிர ரசிகரான கபாலி செல்வா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’12-12-1950′ படத்தின் போஸ்டரால் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

ரஜினியின் தீவிர ரசிகரான கபாலி செல்வா இயக்கி நடித்திருக்கும் ’12-12-1950′ படம் வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

ஒரு படத்தின் வெற்றிக்கு சர்ச்சை மிக அவசியம் என கருதப்படும் இந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் பற்றிய இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான சில போஸ்டர்களும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜெயில் ‘பரோல்’ என்பதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இப்படத்தின் சமீபத்தைய போஸ்டரில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றியும், பரோல் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ‘பரோல்’ என்ற வார்த்தையை விரும்பாத சிலர் இப்பட தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி மிரட்டியுள்ளனர்.

அதேபோல், சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மற்றொரு போஸ்டரில், தமிழ் திரையுலம் மூலம் தமிழ்நாட்டின் முதலமைச்சரான நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அந்த வரிசையில் இப்படத்தின் தலைப்பையும் சேர்த்து வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடப்பட்டது. இந்த போஸ்டரும் சர்ச்சைகளுக்கு இடையே வரவேற்பை பெற்றது.

” படத்தின் மையக்கருத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ‘பரோல்’ என்பது கதையின் முக்கிய பங்காகும். ‘பரோல்’ என்ற விஷயம் நமது ஊரில் மிகவும் பேசப்படும் தலைப்பாக தற்போது மாறியுள்ளதால் தான் இந்த சர்ச்சையே. இது தற்செயலாக நடந்துள்ள விஷயமே தவிர, திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் அல்ல. இப்படத்தை வெளியிடுவதற்கு விநியோகத்தார்கள் இடையே இருக்கும் ஆர்வம் எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தந்துள்ளது. எந்த ஒரு நடிகரின் ரசிகனும் ரசித்து கொண்டாடும் படமாக ’12-12-1950′ இருக்கும் ” என்று படத்தின் இணை தயாரிப்பாளர் யாகூப் அலி கூறினார்.

Leave a Reply