![](https://www.cinemapluz.com/wp-content/uploads/2019/04/dc-Cover-54mmbl8qgf4j6iojda90ffs636-20170717124928.Medi_.jpeg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் டாப் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விஜயகாந்த் என பலரையும் வைத்து படம் இயக்கிவிட்டார். சமீபத்தில் தளபதி விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து சர்கார் படத்தை இயக்கி அதில் வெற்றியை ருசித்தார்.
இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 166-வது படத்தை இயக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பது சமீபத்தில் தெரியவந்தது. யோகிபாபு இப்படத்தில் இணைந்துள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய சர்க்கார் படத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார்.
இவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தலைவரின் Trail முடிந்துவிட்டது என்று பதிவு செய்துள்ளார். இதனால் சூப்பர்ஸ்டாரின் கெட்டப் என்னவாக இருக்கும் என்ற ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். நிச்சயம் முருகதாஸ் திரைப்பயணத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என்றே கூறலாம்.