தமிழ் சினிமாவில் காமடி நடிகர்களுக்கு பஞ்சமாகி விட்டது. இந்த துறையில் பிரபலமான காமடி நடிகர்களாக சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், விவேக் மற்றும் வடிவேலு ஆகியோர் இருந்தவர். இந்நிலையில் தற்போதைய ஜென்ரேசனில் காமடி ந்டிகர்க்ளுடு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காமடி நடிகர்கள் ஹீரோவாக மாற விரும்புவதும், அல்லது ரசிகர்களை சிரிக்க வைக்க புதிய ஐடியாக்கள் இல்லாமல் இருப்பதுமே காரணமாக இருந்து வருகிறது.
நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்ததுடன், அரசியலில் நுழைந்தது காரணமாக சினிமா துறையில் மறைமுகமாக தடை செய்யப்பட்டு விட்டார். பின்னர் விவேக் மற்றும் சந்தானம் முன்னணி இடத்தை பிடித்தனர். சந்தானம் முன்னணி காமடி நடிகராக மாறிய நிலையில் ஹீரோவாக நடித்தார். இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு படம் தவிர மற்ற படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
நடிகர் சூரி கொஞ்ச நாட்கள் காமடியில் கலக்கி வந்தார். அவரது ஆங்கிலத்தை தவறாக பேசுவது தொடர்ந்து அவருக்கு கைகொடுக்க வில்லை. சீமாராஜா, சாமி ஸ்கொயர் படங்களில் அவரது காமடிகள் பெரியதாக எடுபடவில்லை.
தமிழ் பட சீரிஸ்களில் நடித்த சதீஷ், பார்மில் இருந்த போதும், தற்போது அவரது காமடிகளும் ரசிக்கும் படியாக இல்லை. இந்நிலையில், யோகிபாபு காமடி நடிகராக வெளியே வர தொடங்கினார்.
தற்போது வரும் வெள்ளிகிழமைகளில் வெளியாகி அனைத்து படங்களிலும் இடம் பெற்றுள்ளது ஓவர் டோஸ் ஆக மாறியுள்ளது. இவரும் ஹீரோவாக தர்ம பிரபு, குர்கா மற்றும் ஜம்பியா படங்களில் நடித்து வருகிறார். நடிகை நயனதாராவுடன் இவர் நடித்த ஐரா படத்தில் இவர் காமடி ரசிக்க முடியாமல் போனதுடன், இவரது கேரக்டர் எந்த விதத்திலும் படத்திற்கு உதவவில்லை
இவரை தொடர்ந்து நான் கடவுள் ராஜேந்திரன், தனது தனித்துவமிக்க வாய்ஸ் மற்றும் தோற்றதால் ரசிகர்களை சிரிக்க வைத்தார். தற்போது சினிமா தயாரிப்பாளர்கள் யூடியூப் புகழ் ஆர்ஜே விக்னேஷ் காந்தை காமடிக்காக இணைந்து தேவ் படத்தில் சோதனை செய்துள்ளனர். இதுவும் பெரியளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை.
ஆகையால், டைரக்டர்களும், காமடியன்கள், தங்கள் படத்தில் காமடி காட்சிகளை எழுத நல்ல குழுவினரை நியமிக்க வேண்டும். இலையென்றால், கோலிவுட் ரசிகர்கள் அடுத்த முன்னணி காமடியங்களுக்காக காத்திருக்க தொடங்குவார்கள்.