பிரபுதேவாவை போன்றே நடிகர், இயக்குநர், நடன அமைப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார் ராகவா லாரன்ஸ். முனி, காஞ்சனா, காஞ்சனா 2 என்று அடுத்தடுத்து த்ரில்லர் படங்களில் நடித்து வெற்றி பெற்ற இயக்குநராக வலம் வரும் லாரன்ஸ் தற்போது மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ், திடீரென ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கூடவே பி.வாசு இயக்கத்தில் தான் நடித்து வரும் சிவலிங்கா படம் பற்றியும் கூறி வாழ்த்துப் பெற்றார். மேலும் அவர், தனது தாயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டி வருவதை பற்றியும், அது சம்மந்தமான புகைப்படங்களை அவருக்கு காண்பித்து வாழ்த்துப் பெற்றார். கோயில் கட்டும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாக லாரன்ஸ் கூறினார்.