Sunday, April 19
Shadow

Tag: #rajinikanth #political #mgr #velappanchavadi #karunanithi #cho #jayalalitha #sunderpichai #abdulkalam

‘எம்ஜிஆர் போல மிக சிறந்த ஆட்சியை கொடுப்பேன் ரஜினிகாந்த் வாக்குறுதி

‘எம்ஜிஆர் போல மிக சிறந்த ஆட்சியை கொடுப்பேன் ரஜினிகாந்த் வாக்குறுதி

Latest News, Top Highlights
மறைந்த முதல்வர் எம்ஜிஆர் போல தம்மால் நல்லாட்சி கொடுக்க முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் ரஜினிகாந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். அதில் ''மக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டோம். மக்களே எங்களை மன்னித்துவிடுங்கள். எம்ஜிஆர் சிலை திறப்பதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்று தெரியவில்லை.'' என்றார். மேலும் ''அரசியல் பேச கூடாது என்றுதான் இருந்தான். ஆனால் இப்போது என்னை அரசியல் பேச வைத்து விட்டார்கள்.கருணாநிதி, சோ ஆகியோரிடம் பேசி அரசியல் கற்றேன்.அப்படித்தான் நான் அரசியலுக்கு வந்தேன்'' என்றார் மேலும் ''நான் அரசியலுக்கு வந்ததை வாழ்த்த வேண்டாம், ஏளனம் செய்யாதீர்கள். ...