Wednesday, June 17
Shadow

கட்சியை எப்போ சார் ஆரம்பிப்பீங்க? ரஜினிக்கு ரசிகர்கள் திடீர் நெருக்கடி

ரஜினி மக்கள் மன்றத்தில், கிளை நிர்வாகி களை நியமிக்கும் பணி, வேகமாக நடந்து வரும் நிலையில், கட்சி துவக்குவதை, ரஜினி தாமதப்படுத்தி வருவது, அவரது ஆதரவாளர் களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., மறைவுக்கு பின், பலருக்கும் முதல்வர் ஆசை வந்து விட்டது. நடிகர் கமல், ‘மக்கள் நீதி மையம்’ என்ற கட்சியை துவக்கி, நடத்தி வருகிறார். தேர்தல் கமிஷனிலும், தன் கட்சி பெயரை பதிவு செய்து விட்டார். அவருக்கு முன், அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்த, ரஜினி, இன்னமும் கட்சி துவக்கவில்லை. எனினும், ரஜினி மக்கள் மன்றத்தில், உறுப்பினர்களை சேர்க்கும் பணியை துவக்கி உள்ளார்.அத்துடன், கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளையும், வேகப்படுத்தி உள்ளார். கமல், கட்சி நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

அவருக்கு நேர்மாறாக, கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி, நிர்வாகிகளை நியமித்த பின், கட்சியை துவக்க, ரஜினி முடிவு செய்துள்ளார்.அதன்படி, நிர்வாகிகளை நியமிக் கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஓட்டுச்சாவடி அடிப் படையில், கிளைகள் உருவாக்கப்படுகின்றன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகரம் என, கிளைகள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு கிளையிலும், குறைந்தபட்சம், 30 நிர்வாகிகள் நியமிக்கப் படுகின்றனர்.

இதுவரை, 40 ஆயிரம் கிளைகள் ஏற்படுத்தப்பட்டு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சில கிளை களில், 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நியமிக்கப் பட்டு உள்ளனர்.மீதமுள்ள ஓட்டுச்சாவடிகளிலும், கிளைகள் ஏற்படுத்தி, நிர்வாகிகள் நியமிக்கும் பணியை, ஜூலைக்குள் முடிக்க வேண்டும் என, தன் மன்றத்தினருக்கு, ரஜினி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால், சத்தமில்லாமல், நிர்வாகிகளை நியமிக்கும் பணி, வேகமாக நடந்து வருகிறது.

ஆனால், ரஜினி, கட்சி அறிவிப்பை தாமதமாக்கி வருவது, நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்களிடம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ‘விரைவாக கட்சியை துவக்க வேண்டும்’ என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்

 

ரஜினி, சட்டசபை தேர்தலுக்கு, ஆறு மாதங்களுக்கு முன், கட்சியைதுவக்கி, தேர்தலில் போட்டியிட வேண்டும் என, முடிவு செய்துள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிட, அவர் விரும்பவில்லை. லோக்சபா தேர்தலுடன், சட்டசபைக்கும் தேர்தல் வந்துவிடும் என, அவர் எதிர்பார்த்தார்.ஆனால், தமிழகத்தில்,தற்போது சூழல் மாறி வருகிறது. அ.தி. மு.க., ஆட்சி, 2021 வரை இருப்பதற்கான வாய்ப்பு
அதிகரித்து வருகிறது. அதற்கு முன், 2019ல், லோக்சபா தேர்தல் வரும்.அதில், போட்டியிடா மல் ஒதுங்கி இருந்தால், சிரமப்பட்டு சேர்த்த உறுப்பினர்கள், விரக்தி அடைந்து விடுவர்.

தேர்தலை சந்திக்க, இன்னும், 3ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றால், அதுவரை, கட்சி நிர்வாகிகளை காப்பாற்றுவதும் சிரமமாகி விடும். லோக்சபா தேர்தல், அரசியலில் திடீர் மாற்றங் களை ஏற்படுத்தி விடும். அதன்பின், சூழ்நிலை எப்படி அமையும் என்பது தெரியாத தால், தங்களின் அரசியல் எதிர்காலம் சூனிய மாகி விடுமோ என்ற அச்சம், ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

எனவே, விரைவாக கட்சியை அறிவித்து, லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே, பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது. அதை, ரஜினியின் கவனத்திற்கு கொண்டு செல்ல,முயற்சிகள் எடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்