கட்சியை எப்போ சார் ஆரம்பிப்பீங்க? ரஜினிக்கு ரசிகர்கள் திடீர் நெருக்கடி
ரஜினி மக்கள் மன்றத்தில், கிளை நிர்வாகி களை நியமிக்கும் பணி, வேகமாக நடந்து வரும் நிலையில், கட்சி துவக்குவதை, ரஜினி தாமதப்படுத்தி வருவது, அவரது ஆதரவாளர் களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெ., மறைவுக்கு பின், பலருக்கும் முதல்வர் ஆசை வந்து விட்டது. நடிகர் கமல், 'மக்கள் நீதி மையம்' என்ற கட்சியை துவக்கி, நடத்தி வருகிறார். தேர்தல் கமிஷனிலும், தன் கட்சி பெயரை பதிவு செய்து விட்டார். அவருக்கு முன், அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்த, ரஜினி, இன்னமும் கட்சி துவக்கவில்லை. எனினும், ரஜினி மக்கள் மன்றத்தில், உறுப்பினர்களை சேர்க்கும் பணியை துவக்கி உள்ளார்.அத்துடன், கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளையும், வேகப்படுத்தி உள்ளார். கமல், கட்சி நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
அவருக்கு நேர்மாறாக, கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி, நிர்வாகிகளை நியமித்த பின், கட்சியை துவக்க, ரஜினி முடிவு செய்து...
