Monday, April 27
Shadow

ரஜினி படத்தை 700 கோடிக்கு விற்க இலக்கு….!!!

இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் நடிகர் ரஜனிகாந்த் நடிக்கும் படம் 2.0. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. 35௦கோடி செலவில் தயாருகும் படம் இது இந்த படத்தின் வியாபாரம் மிக பெரிய அளவில் செய்ய முயற்சியில் ஈடுபடுகின்றனர் லைக்கா நிறுவனம் அதோடு இதுபோல் ஒரு தமிழ் படம் இனியாராலும் தயாரிக்க முடியாது என்ற அளவுக்கு சொல்லும் அளவுக்கு முயற்சியில இறங்கியுள்ளனர்.

மிக அதிகமான செலவு தொகையில் எடுக்கப்பட்டு வரும் மிக பிரம்மாண்டமான திரைப்படமாகும்.

இந்த திரைப்படம் ரூ. 250 கோடி செலவில் முடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இந்த படத்தை கிட்ட தட்ட 400 கோடிக்கு மேல் செலவு செய்து எடுத்துள்ளனர்.

படபிடிப்புக்கு மட்டும் இதுவரை ரூ 350 கோடியும், கிராபிக்ஸ் பணிக்கு இதுவரை 50 கோடி செலவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாகுபலி 2 படம் 400 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும். ஆகவே 2.0 படம் 700 கோடிக்கு விற்பனை செய்ய இந்த படத்தை எடுக்கும் லைக்கா நிறுவனம் விரும்புவதாக தெரிகிறது.

Leave a Reply