Wednesday, October 28
Shadow

ரன்பீர் கபூர் – யஷ் நடிக்கும் ‘ராமாயணா’ திரைப்படம்: இன்று தொடங்குகிறது டிக்கெட் முன்பதிவு!

ரன்பீர் கபூர் – யஷ் நடிக்கும் ‘ராமாயணா’ திரைப்படம்: இன்று தொடங்குகிறது டிக்கெட் முன்பதிவு!

இந்தியாவின் இதிகாசக் கதையான ராமாயணத்தைப் பிரம்மாண்டமான திரை அனுபவமாகக் கொண்டு வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்பதிவு இன்று (அக்டோபர் 20) முதல் இந்தியா முழுவதும் தொடங்குகிறது. ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், வரும் நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தசரா பண்டிகையை முன்னிட்டு தொடங்கும் இந்த முன்பதிவின் மூலம், படத்தைத் திரையரங்குகளில் காண விரும்பும் ரசிகர்கள் முக்கிய டிக்கெட் முன்பதிவு தளங்களில் தங்களுக்கான இருக்கைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். குறிப்பாக, ஐமேக்ஸ் (IMAX) உள்ளிட்ட பிரீமியம் திரையிடல் வசதிகளிலும் இப்படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தை ‘தங்கல்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம், இந்திய இதிகாசமான ராமாயணத்தின் கதையை நவீனத் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேசத் தரத்திலான திரைப்பட உருவாக்கத்துடன் உலக ரசிகர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் தயாராகியுள்ளது.

இந்தப் படத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர். இருவரின் இசைக் கூட்டணி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள ‘ராமாயணா’, இந்திய ரசிகர்களை மட்டுமின்றி சர்வதேச அளவிலான பார்வையாளர்களையும் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

ராமாயணத்தின் காலத்தால் அழியாத கதையைப் புதிய தலைமுறை ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரை அனுபவமாக வழங்கத் தயாராகும் இப்படம், வெளியீட்டுக்கு முன்பே திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Ranbir Kapoor and Yash’s ‘Ramayana’ Ticket Bookings Open Today Ahead of November 5 Worldwide Release

Advance bookings for Ramayana, the highly anticipated epic starring Ranbir Kapoor, Yash and Sai Pallavi, open across major ticket-booking platforms in India today, October 20, ahead of the film’s worldwide theatrical release on November 5.

Marking the occasion of Dussehra, the advance booking window gives audiences an opportunity to reserve their seats for the film’s much-awaited big-screen experience. The movie is also set to release in premium theatrical formats, including IMAX, offering audiences an immersive cinematic experience.

Directed by Nitesh Tiwari, Ramayana is produced by Namit Malhotra’s Prime Focus Studios in association with Yash’s Monster Mind Creations. Envisioned as a grand two-part cinematic adaptation, the film brings together a prominent ensemble cast and an international creative team to present the timeless Indian epic to audiences across the world.

Adding to the film’s appeal is the musical collaboration between internationally acclaimed composer Hans Zimmer and celebrated Indian composer A.R. Rahman. Their association marks a significant highlight of the project and has further heightened anticipation among moviegoers.

Ramayana is scheduled to release worldwide on November 5 in five languages — Hindi, Tamil, Telugu, Kannada and Malayalam. With its ambitious scale and release planned across premium theatrical formats, the film aims to deliver a grand cinematic experience to audiences in India and international markets.

The second instalment of the film is scheduled to arrive in theatres during Diwali 2027, extending the epic’s cinematic journey across two parts.

With its star-studded cast, internationally recognised musical talent and ambitious storytelling, Ramayana is gearing up for its theatrical debut, bringing one of India’s most enduring epics to the big screen for a new generation of audiences.