
நடிகை ரெஜினா கெசண்ட்ரா தெலுங்கை விட தமிழில் குறைவான சம்பளத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
கண்ட நாள் முதல் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரெஜினா கெசண்ட்ரா, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வருகிறார். தற்போது தமிழிலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கிறது.
2017-ல் மட்டும் ரெஜினா நடிப்பில் மூன்று தமிழ் படங்கள் வெளியாகின. செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா உடன் ரெஜினா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் வெளியாகாமல் இருக்கிறது. விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது, தமிழ் சினிமாவில் கிடைக்கும் வாய்ப்பை தக்க வைக்க தெலுங்கில் வாங்கும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே வாங்குகிறாராம். அதன் மூலம் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெறலாம் என்று ரெஜினா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.