Wednesday, June 24
Shadow

அரவிந்த் சாமிக்கு நாயகியாக ரித்திகா சிங் ஒப்பந்தம்

‘போகன்’ பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ‘சதுரங்க வேட்டை 2’ படத்தில் நடித்து வருகிறார் அரவிந்த் சாமி. த்ரிஷா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்தை நிர்மல் குமார் இயக்கி வருகிறார்.

‘சதுரங்க வேட்டை 2’ படத்தைத் தொடர்ந்து சித்திக் இயக்கத்தில் தமிழில் உருவாகும் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ மற்றும் செல்வா இயக்கும் படம் ஆகியவற்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அரவிந்த்சாமி.

இதில் செல்வா இயக்கும் படத்தை ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை தயாரித்த மேஜிக் பாக்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் ரித்திகா சிங் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இமான் இசையமைக்கவுள்ள இப்படத்துக்கு தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply