
சேப்பாக்கத்தில் ‘ரோர் 26’ வெடித்த வெற்றி – இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கைவண்ணத்தில் மறக்க முடியாத இரவு!
‘பாணா காத்தாடி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்காக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ‘ரோர் 26’ (Roar 26) பிரம்மாண்ட நிகழ்ச்சியை இயக்குநராக பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தி கவனம் ஈர்த்துள்ளார்.
நட்சத்திரங்கள் திரண்ட இந்த விழாவில், கிரிக்கெட் ஜாம்பவான்கள் எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மைக் ஹசி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர். அதேசமயம், தமிழ் திரையுலக முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிஎஸ்கே அணிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியை ஆர்.ஜே. பாலாஜி, அனிருதா ஸ்ரீகாந்த், அர்ஜுன் தாஸ் மற்றும் ஆர்.கே. (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொகுத்து வழங்கி, அரங்கத்தை முழுவதும் உற்சாகமாக வைத்தனர்.
சைமா (SIIMA), மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் போன்ற உயர்மட்ட நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக இயக்கிய அனுபவத்தை கொண்ட பத்ரி வெங்கடேஷ், ‘ரோர் 26’ நிகழ்வையும் அதே தரத்தில் திட்டமிட்டு செயல்படுத்தி, ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கியுள்ளார்.
ஏற்கனவே மூன்று தமிழ்ப் படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் முழு வேகத்தில் ஈடுபட்டு வருகிறார்.

‘Roar 26’ Lights Up Chepauk – Director Badri Venkatesh Delivers a Spectacular, Unforgettable Night!
Acclaimed filmmaker Badri Venkatesh, best known for directing hit films like Baana Kaathadi, successfully helmed the grand ‘Roar 26’ fan event for the Chennai Super Kings at the iconic Chepauk Stadium, delivering a visually stunning and high-energy experience.
The star-studded event brought together cricket legends including M.S. Dhoni, Ruturaj Gaikwad, Mike Hussey, and Suresh Raina, who thrilled fans with their presence. Adding to the excitement, popular Tamil actor Sivakarthikeyan attended the event and extended his heartfelt wishes to the CSK team.
The evening was hosted by R.J. Balaji, Anirudha Srikanth, Arjun Das, and R.K. (Radhakrishnan), who kept the crowd engaged and energized throughout the show.
With his proven expertise in directing prestigious events like SIIMA and the Mirchi Music Awards, Badri Venkatesh ensured that ‘Roar 26’ turned into a memorable spectacle for fans.
Having already directed three Tamil films, Badri Venkatesh is currently busy working on his next project, further strengthening his impressive creative portfolio.
