Thursday, March 12
Shadow

மலேசியாவில் பார்த்திபன் ஆடும் ‘உள்ளே வெளியே’ ஆட்டம்!

தமிழ் சினிமாவில் கதைக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்ட நிலைதானோ என்னவோ அனைத்து இயக்குனர்களும் தங்களது வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க களமிறங்கி விட்டார்கள்.

அந்த வரிசையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தான் இயக்கி, நடித்து, தயாரித்து 1993-ல் வெளியான ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.

கடைசியாக ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி, நடக்கவிருக்கும் இந்த படத்திற்கான தயாரிப்பாளர்களை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள பார்த்திபன் அது குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், ‘‘மலேசிய நாட்டிற்கோர் நற்செய்தி! 5,6,7 தேதிகளில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் விழாவுக்கும், என அடுத்த படமான ‘உள்ளே வெளியே-2’ படத்திற்கான தயாரிப்பாளர்களை உறுதி செய்யும் பணிக்காகவும் மலேசியா வருகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply