
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ’தானா சேர்ந்த கூட்டம்’. வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன், ‘ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் “ தானா சேர்ந்த கூட்டம் “ சிறப்பாக நடைபெறுவதற்கு முக்கியமான காரணம். நான் Special 26 படத்தின் உரிமையை வாங்கி. அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். நான் சூர்யா நடித்த “ காக்க காக்க “ போன்ற படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அந்த படம் தான் என்னை போன்ற பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது.
உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன். இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பாருங்கள்.
கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர் , பிரதர் என்று அழுத்தி கூறிவிட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில் தான் இருக்கிறீர்கள்.’ என்றார்.
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் என்பதை இந்நேரத்தில் சொல்லித்தான் ஆக வேண்டும். கீர்த்தி விக்னேஷ் சிவனின் தங்கை என்றால்… நயன்தாராவிற்கு..???