Friday, February 7
Shadow

ரஜினிகாந்துக்கு வில்லனாக வரும் எஸ்.ஜெ.சூர்யா

இயக்குனராக இருந்து நடிகராக மாறிவிட்ட எஸ்.ஜே.சூர்யா, தற்போது ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பிஸியான நடிகராக நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை அவரது உதவியாளரும், கள்வனின் காதலி பட இயக்குநருமான தமிழ்வாணன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இந்த படத்தில் அமிதாப் பச்சனுடன் படப்பிடிப்பு தளத்தில் இணைந்து எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டு, “என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான தருணம். நான் கனவு கூட கண்டிராத ஒரு கனவை நிறைவேற்றிய தாய், தந்தை மற்றும் கடவுளுக்கு நன்றி எனக் கூறியதோடு அமிதாப்பச்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்ல இந்த பதிவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவருடன் மட்டுமே பகிர்ந்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. ரஜினியின் தீவிர ரசிகரான எஸ்.ஜே.சூர்யா, ஏற்கனவே முருகதாஸ் டைரக்சனில் ஸ்பைடர் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவருடனும் தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும் பொழுது அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் அதாவது வில்லனாக நடிக்கிறார் என்பதை சூசகமாக உணர்த்துகிறார் என்றே தெரிகிறது.