Saturday, October 24
Shadow

உலக சினிமாவை எதிர்க்கொள்ள போகும் பிரபாஸின் சாஹோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் படம் சாஹோ.ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷங்கர் – இசான் – லாய் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

ரூ.150 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை யூவி என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருண் விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சுஜீத் எழுதி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கும் பிரபாஸ் ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.