
மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் இவர் தமிழி குறைந்த படங்கள் நடித்து இருந்தாலும் மிகவும் பாப்புலரானவர் அதிலும் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் படம் மாரி 2 மூலம் எழும் பிரபலமாகியுள்ளார்.
தெலுங்கில் வருண் தேஜுடன் இணைந்து சாய் பல்லவி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ஃபிடா. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக வச்சின்டே பாடல் யூடியூபில் வெளியானது முதல் சக்கைபோடு போட்டு வருகிறது. தற்போது அந்த பாடல் தான் தென்னிந்திய சினிமாவில் யூடியூபில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வீடியோவாக ஆகியுள்ளது. 17.3 கோடி பார்வையார்களை பெற்றதன் மூலம், இதற்கு முந்தைய சாதனையாக இருந்த தனுஷின் கொலவெறி பாடல் சாதனையை முறியடித்துள்ளது.
முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் கொலவெறி பாடல் தான் தென்னிந்திய சினிமாவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வீடியோவாக இருந்தது. 17.2 கோடி பார்வையாளர்களுடன் அப்பாடல் முதலிடத்தில் இருந்தது. அதை பின்னுக்கு தள்ளி தற்போது சாய் பல்லவியின் ‘வச்சின்டே’ பாடல் முதலிடத்தை பிடித்துள்ளது
அதிக ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள அஜித், விஜய், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் பாடல்கள் கூட இந்த அளவுக்கு வெற்றியடையாத நிலையில் சாய் பல்லவியின் பாடல் முதலிடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
