Tuesday, April 21
Shadow

நான் கடவுள் இல்லை உங்களில் ஒருவன் இளையராஜா !

இளையராஜாவை கவுரவிக்கும் விதமாவும் அதோடு தயாரிப்பு சங்கத்துக்கும் இசையமைப்பாளர் சங்கத்துக்கும் நிதி திரட்டும் நிகழ்ச்சியாக தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பிப்ரவரி மாதம் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறது. இதற்கான வேலைகள் துவங்கி உள்ள நிலையில், நேற்று (6ம் தேதி) விழாவுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்ப நிகழ்ச்சி நடந்தது. இதில் பலூனில் பறந்து டிக்கெட் விற்பனையை இளையராஜா துவக்கி வைத்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பெருமையுடன் வழங்கும் இளையராஜா 75 நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி மாதம் 2, 3 தேதிகளில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ-வில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆரம்ப நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

செங்கல்பட்டு அருகே பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் மகேந்திரா வோர்ல்ட் சிட்டி-யில், நடைபெறும் 5-வது தமிழ்நாடு (முதன்முறையாக தமிழ்நாட்டில்) இண்டெர்னேஷனல் பலூன் திருவிழா நடைபெறும் இடத்தில் டிக்கெட் விற்பனை துவக்கி வைக்கப்பட்டது.இன் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர் இதில் பேசிய அனைவரும் இளையராஜாவை கடவுளுக்கு சமமாக பேசினார்கள் அதிலும் விஷால் திருப்பதி பெருமாளுக்கு பக்கத்தில் அமர்ந்து இருப்பது போல இருக்கிறது என்று கூறினார்.

இவர்கள் அனைவரும் பேசி முடித்தவவுடன் இளையாராஜா இதயக்கோவில் படத்தில் இருந்து இதயம் ஒரு கோவில் அதில் உதயம் பாடலுடன் தன் உரையை ஆரம்பித்தார் அப்போது பேசும்போது இங்கு இருக்கிரவர்கெல்லாம் என்னை கடவுளுடன் ஒப்பிட்டு பேசினார்கள் அதற்கு நான் கடவுள் எல்லாம் இல்லை சாதாரண மனிதன் தான் என்று கூறினார் .

நிகழ்ச்சியில், இளையராஜா 75 என்ற பெயரில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. ராட்ச பலூன் ஒன்றில் இளையராஜா பயணம் செய்து, டிக்கெட் விற்பனையை துவக்கி வைத்தார். மற்றொரு பலூனில் சங்க தலைவர் விஷால் பயணம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த விஷால் இந்த நிகழ்வு பிப்ரவரி மாதம் 2ம் தேதியும் 3ம் தேதியும் நடைபெறுகிறது. இதில் இந்திய சினிமா முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். ஹிந்தி தமிழ் மலையாளம் தெலுங்கு சினிமா பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள் என்று கூறினார்.