Saturday, April 20
Shadow

எழுத்தாளர் சுஜாதாவின் கதை தான் விஜய் ஆண்டனியின் சைத்தான்

பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் புதிய படம் “சைத்தான்”. இதில் விஜய் ஆண்டனி சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் னால வரவேற்பை பெற்றது.முன்னதாக இப்படம் நவம்பர் 17-ல் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டு பிரச்சனையால் தற்போது இப்படம் டிசம்பர் 1-ம் தேதிக்கு தள்ளிபோய் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதை மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதி 1992-ல் வெளிவந்த ‘ஆ’ என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்டதுதான் என இயக்குனர் பிரதி கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். மேலும் இதற்காக சுஜாதாவின் மனைவியிடம் இவர் முறைப்படி அனுமதி வாங்கியுள்ளாராம்.

இந்த படத்தை இருமுகன் படத்தை ரிலீஸ் செய்த ஆரா பிலிம்ஸ் தமிழ்கமுழுதும் மிக பிரமாண்டமாய் வெளியிடுகிறார்கள் . இந்த படத்தின் ரிலீஸ் அன்றே இப்படத்தி முக்கிய காட்சியை யு டுப்யில் வெளியிட திட்டமிட்டுள்ளார் படத்தின் இயக்குனர்

Leave a Reply