Tuesday, July 21
Shadow

ராம் பொதினேனியின் புதிய முயற்சிக்கு சாம் சி எஸ் இசை பலம்; #RAPO23 மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

ராம் பொதினேனியின் புதிய முயற்சிக்கு சாம் சி எஸ் இசை பலம்; #RAPO23 மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

சென்னை, ஜூலை 8:
தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி தனது 23வது திரைப்படமான #RAPO23 மூலம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இந்தப் படத்தில் அவர் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், இசையமைப்பாளராக சாம் சி எஸ் இணைந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் வகையில் உருவாகும் இந்தப் படத்தின் இசைப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் படங்களுக்கு பின்னணி இசை அமைப்பதில் தனித்துவமான பாணியை உருவாக்கியுள்ள சாம் சி எஸ், இந்தப் படத்திலும் கதையின் உணர்வுகளை வலுப்படுத்தும் இசையை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சமீபகாலமாக பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறிப்பாக பின்னணி இசைக்காக அவர் பெற்றுள்ள பாராட்டுகள், அவரது புதிய திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

மறுபுறம், நடிகராக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ராம் பொதினேனி, இயக்குநராக மேற்கொள்ளும் முதல் முயற்சி என்பதால் #RAPO23 மீது கூடுதல் கவனம் திரும்பியுள்ளது. கதை, நடிப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் இசையும் இப்படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.

இந்நிலையில், ராம் பொதினேனி – சாம் சி எஸ் கூட்டணி இணைந்துள்ள #RAPO23, தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களிடையிலும் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய திரைப்படமாக உருவெடுத்து வருகிறது.

 

Sam C S to Power Ram Pothineni’s New Venture with Music; Growing Anticipation for #RAPO23

Chennai, July 8:
Telugu actor Ram Pothineni has embarked on a new venture with his 23rd film, #RAPO23. As he makes his directorial debut with this project, the involvement of music composer Sam C S has caught the attention of fans.

The film, which is being made as a psychological action thriller, is set to begin its music work soon, the team said. Sam C S, known for developing a distinctive style in composing background scores for thriller and action films, is expected to deliver music that further strengthens the emotional depth of the story.

Sam C S, who has been consistently working across multiple language films in recent times, continues to compose for Tamil, Telugu, Kannada, and Hindi projects. In particular, the acclaim he has received for his background scores has kept expectations high for his upcoming ventures.

On the other hand, Ram Pothineni, who has built a strong fan base as an actor, is drawing added attention to #RAPO23 as this marks his first attempt as a director. Industry circles believe that along with the story, performances, and technical aspects, music will also be one of the key highlights of the film.

Meanwhile, #RAPO23, bringing together Ram Pothineni and Sam C S, is emerging as a film that has generated notable anticipation not just among Telugu audiences but also among fans across South India.