
‘டாக்ஸிக்’ உலகுக்குள் முதல் பார்வை… யாஷ் – கியாரா காதலை உயிர்ப்பிக்கும் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியீடு!
‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆடியோ வடிவில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இந்தப் பாடல், தற்போது காட்சி வடிவிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Monster Mind Creations, KVN Productions மற்றும் Zee Music Company இணைந்து வெளியிட்டுள்ள இந்த மியூசிக் வீடியோ, பாடலை மட்டும் அல்லாமல் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மர்மமான மற்றும் பிரம்மாண்டமான உலகையும் ரசிகர்களுக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறது. இந்திய சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் காட்சியமைப்பை இந்த வீடியோ சிறப்பாக வெளிப்படுத்துகிறது.
இந்தப் பாடலில் முதன்முறையாக யாஷ் மற்றும் கியாரா அத்வானி இணைந்து திரையில் தோன்றியுள்ளனர். இருவரின் இயல்பான திரை வேதியியல், காதலின் தீவிரமான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான ஒளிப்பதிவு, நேர்த்தியான காட்சியமைப்பு, சக்திவாய்ந்த இசை மற்றும் உணர்வுபூர்வமான கதை சொல்லல் ஆகியவை ‘தபாஹி’ பாடலை மேலும் வலுப்படுத்துகின்றன.
மியூசிக் வீடியோ வெளியீட்டுக்கு முன்பாக, சமூக வலைதளங்களில் படக்குழு ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சிறிய விளம்பர முயற்சியை மேற்கொண்டது. “திருடப்பட்ட சில தருணங்களில் மட்டுமே வாழும் தடைசெய்யப்பட்ட காதலை என்னவென்று அழைப்பீர்கள்?” என்ற பதிவுக்கு கியாரா அத்வானி “தபாஹி” என்று ஒரு வார்த்தையில் பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து Zee Music Company “Stay Tuned…” என பதிவிட்டது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
‘தபாஹி’ பாடலுக்கு இசையமைத்து பாடியிருப்பவர் விஷால் மிஸ்ரா. இந்தி வரிகளை ராஜ் சேகர் எழுதியுள்ளார். பாடல் இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழ் பதிப்பிற்கு விக்னேஷ் சிவன், கன்னடத்திற்கு யோகராஜ் பட், தெலுங்கிற்கு ராமஜோகைய்யா சாஸ்திரி, மலையாளத்திற்கு ரஃபீக் அகமது ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். இதன் மூலம் அனைத்து மொழி ரசிகர்களையும் சென்றடையும் முயற்சியை படக்குழு மேற்கொண்டுள்ளது.
பாடல் குறித்து இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா கூறுகையில், “‘தபாஹி’ என்பது வழக்கமான காதல் பாடல் அல்ல. காதலின் தீவிரம், சரணாகதி மற்றும் கட்டுப்படுத்த முடியாத உணர்வுகளை இசையாக வெளிப்படுத்த முயற்சித்துள்ளேன். யாஷ் திரையில் வெளிப்படுத்தும் ஆற்றலுக்கு இசையிலும் அதே வலிமையை கொடுக்க விரும்பினேன்,” என்றார்.
யாஷ் மற்றும் இயக்குநர் கீது மோகன்தாஸ் இணைந்து கதை எழுதியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் 2026 ஆகஸ்ட் 26 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

First Glimpse Into Toxic World Arrives as ‘Tabaahi’ Official Music Video Is Released
The makers of Toxic: A Fairy Tale for Grown-Ups have officially unveiled the music video of the film’s first single, “Tabaahi,” giving audiences their first visual journey into one of Indian cinema’s most anticipated films. Following the song’s successful audio launch, the visually rich music video has now been released, adding a new dimension to the chartbuster track.
Released by Monster Mind Creations, KVN Productions, and Zee Music Company, the music video not only showcases the song but also offers an immersive introduction to the mysterious and cinematic world of Toxic. With its grand visuals and distinctive aesthetic, the video sets the tone for what promises to be an ambitious big-screen experience.
The track marks the first on-screen pairing of Rocking Star Yash and Kiara Advani, whose chemistry brings an intense and emotionally charged love story to life. Backed by stunning cinematography, compelling storytelling, electrifying guitar arrangements, and a sweeping orchestral score, Tabaahi presents love in its most passionate and unfiltered form.
Ahead of the music video’s release, the makers cleverly built excitement through a social media interaction. The official Toxic handle asked, “What do you call a forbidden love that only exists in stolen time?” while tagging Kiara Advani. She replied with a single word—“Tabaahi.” Soon after, Zee Music Company responded with “Stay Tuned…”, creating significant buzz before the official premiere.
Tabaahi has been composed and sung by Vishal Mishra, with Hindi lyrics written by Raj Shekhar. The song has been released in Hindi, Kannada, Tamil, Telugu, and Malayalam. Acclaimed lyricists Yogaraj Bhat (Kannada), Ramajogayya Sastry (Telugu), Vignesh Shivan (Tamil), and Rafeeq Ahammed (Malayalam) have adapted the lyrics for their respective languages, reflecting the film’s truly pan-Indian vision.
Speaking about the track, Vishal Mishra said, “Tabaahi isn’t a conventional love song. It represents love in its most intense form—raw, consuming, and fearless. I wanted the music to match the emotional power that Yash brings to the screen. The song captures the kind of love that overwhelms you before it comforts you.”
Written by Yash and director Geetu Mohandas, Toxic: A Fairy Tale for Grown-Ups stars Yash, Nayanthara, Kiara Advani, Tara Sutaria, Rukmini Vasanth, and Huma Qureshi in pivotal roles.
Produced by KVN Productions and Monster Mind Creations, the film has been shot in Kannada and English and will also be released in dubbed versions across Tamil, Telugu, Hindi, Malayalam, and other languages. Toxic: A Fairy Tale for Grown-Ups is scheduled for a worldwide theatrical release on August 26, 2026.
