சமீபத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரச்சனையாக இருந்தது சர்கார் கதை விஷயம் இந்த விஷயம் தமிழக முக்கிய பிரச்னை மீ டூ வையே மறக்கவைத்து விட்டது அந்த அளவுக்கு பெரிய பிரச்னை இந்த பிரச்னை முடிவு என்ன என்று எல்லோரும் ஆவலோடு காத்து இருந்த நேரத்தில் வேலியே பயிரை மேய்ந்த கதை ஒன்று தான் இங்க உங்களுக்கு சொல்லபோகிறோம்.
விஜய், கீர்த்தி சுரேஷ் நடத்த சர்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். படம் வருகிற 6ந் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் சர்கார் படத்தின் கதை என்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்ற துணை இயக்குனர் வழக்கு தொடர்ந்தார். ஏ.ஆர்.முருகதாசும் இது என்னுடைய கதை தான் வழக்கை சந்திக்க தயார் என்றார்.
இந்த நிலையில் இருதரப்பும் சமாதானம் ஆயினர். வழக்கு வாபஸ் பெறப்பட்டது. தற்போது உரிமைக்காக தீவிரமாக போராடிய வருண் ராஜேந்திரனுக்கும், அவருக்கு துணையாக இருந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் “நான் என் உரிமைக்காக போராட காரணமே எஸ்.ஏ.சந்திரசேகர்தான்” என்று வருண் ராஜேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
வழக்கு போட்டு சர்கார் படத்தை தடை செய்ய வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. என் கதைக்கு அங்கீகாரம் கேட்டுதான் போராடினேன். 2004ம் ஆண்டு விஜய்க்காக எழுதிய கதை தான் இது. அவரது தந்தையும் எனது குருவுமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சொல்லி படமாக எடுக்க முயற்சித்தேன். அப்போது அது முடியவில்லை.
ஆனால் எனது இந்தப் போராட்டதுக்கு காரணமே எஸ்.ஏ.சந்திரசேகர்தான். அவர் தான் எனக்கு தூண்டுதல். எனக்குள் போராட்ட குணத்தை விதைத்தவரும் அவர் தான். இப்போது என் கதைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகரை சந்திக்க இருக்கிறேன். விஜய் சர்கார் அமைப்பதற்காக எனது செங்கோலை விஜய் ரசிகர்களுக்கும், எஸ்.சி.சந்திரசேகர் சார் குடும்பத்திற்கும் தீபாவளி பரிசாக அளிக்கிறேன்.
இவ்வாறு வருண் கூறியிருக்கிறார்.