
பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவின. இதனால் தற்போது நடித்துள்ள திமிரு புடிச்சவன் படத்தை பெரிதும் நம்புகிறார்.
கணேசா இயக்கத்தில் விஜய் ஆண்டினி உடன் நிவேதா பெத்ராஜ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். முதன்முறையாக போலீஸ் ரோலில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். இப்படம் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சர்கார் படம் அதிக தியேட்டரில் வெளியாவதால் திமிரு புடிச்சவனுக்கு போதிய தியேட்டர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
கடைசிநேரத்தில் வினியோகஸ்தர் தரப்பில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து ‘திமிரு புடிச்சவன்’ படத்தை நவம்பர் 16ம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டதாக சொல்கிறார்கள்.
