Tuesday, October 27
Shadow

தொடர் தோல்வியை தவிர்க்க சசிகுமார் படத்துக்கு முன்னணி நாயகி தங்கை கதாபாத்திரம்

சசிகுமார் நடிக்கும் கொடி வீரன் இந்தபடத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜுன் நடிக்கிறார் என்றும் பார்த்தோம் . குட்டிபுலி, கொம்பன் மருது போன்ற வெற்றி படங்களை இயக்கிய முத்தையா தான் இந்த படத்தை இயக்குவது மேலும் சிறப்பு இந்த படத்தை தயாரித்து ஹீரோவாக களம் இறங்கும் சசிகுமார் தொடர் தோல்வியை தவிர்க்க இந்தவாட்டி தன் குழுவை கொஞ்சம் பிரமாண்டம் மூலம் சரி செய்யலாம் என்று ஹன்சிகா அர்ஜுன் இப்போ தங்கை கதாபாத்திரத்துக்கு முன்னணி நாயகியை அணுகுகிறார் அது மட்டும் இல்லை இவர் ராசியான நாயகியும்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முத்தையா இயக்கத்தில் சசிகுமார், ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் கொடிவீரன் படத்தில், சசிகுமாரின் தங்கையாக நடிக்கிறார். இது பற்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்…

“நான் எப்போதுமே ஒரு படத்தில் நடிக்கும் போது அதில் யார் ஹீரோ, எத்தனை நாயகிகள் என்று பார்ப்பது இல்லை. கதையில் எனது பங்கு என்ன என்பதை மட்டுமே பார்க்கிறேன்.

அந்த வகையில் ‘கொடிவீரன்’ படத்தில் எனக்கு தங்கை வேடம் என்றாலும் அழுத்தமான வேடம். கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடம். ‘காக்காமுட்டை’ படத்தில் எப்படி எனது அம்மா வேடம் பேச வைத்ததோ, அது போல் இந்த தங்கை வேடமும் என்னை பற்றி பேசவைக்கும் வகையில் இருக்கும். எனவே, சசிகுமாருக்கு தங்கையானதும் மகிழ்ச்சி தான்” என்றார்.

Leave a Reply