
‘கேப்டன் மில்லர்’ மூலம் மீண்டும் தேசிய விருது மேடையில் சத்யஜோதி பிலிம்ஸ் – டி.ஜி. தியாகராஜன் பெருமிதம்!
ஏழு தசாப்தங்களாக தொடரும் திரைப்பயணத்தில் மற்றுமொரு தேசிய அங்கீகாரம்
சென்னை: இந்திய சினிமாவின் உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான ரஜத் கமல் விருது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் இந்த விருதை விழாவில் நேரில் பெற்றுக்கொண்டார்.
மேலும், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு Special Mention தேசிய அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஒரே திரைப்படத்திற்காக தயாரிப்பு நிறுவனத்திற்கும், அதன் முக்கிய நடிகருக்கும் ஒரே விருது விழாவில் தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைத்திருப்பது படக்குழுவினருக்கு கூடுதல் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
‘கேப்டன் மில்லர்’ படத்தின் இந்த தேசிய அங்கீகாரம், ஒரு திரைப்படத்தின் வெற்றியை மட்டும் பிரதிபலிப்பதாக இல்லாமல், பல ஆண்டுகளாக சினிமா மீது கொண்ட அர்ப்பணிப்புடன் பயணித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸின் நீண்ட திரைப்பயணத்திலும் ஒரு முக்கியமான அத்தியாயமாக அமைந்துள்ளது.
1959-ம் ஆண்டு வெளியான ‘கல்யாண பரிசு’ திரைப்படம் தொடங்கி தமிழ் சினிமாவின் பல்வேறு காலகட்டங்களுடன் பயணித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ், பல்வேறு கதைக்களங்களிலும் தலைமுறைகளுக்கு ஏற்ப மாறிவரும் சினிமா ரசனைக்கு ஏற்ற படைப்புகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிறுவனத்தின் திரைப்பயணத்தில் தேசிய விருதுகளுக்கும் முக்கிய இடம் உள்ளது. ‘கல்யாண பரிசு’ சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய அங்கீகாரத்தை பெற்றது. பின்னர் ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படத்தின் மூலம் நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றதுடன், நடிகர் கமல்ஹாசனின் முதல் தேசிய விருதிற்கும் வழிவகுத்தது.
அந்த வரிசையில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த ‘விஸ்வாசம்’ திரைப்படமும் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றது. தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மூலம் அந்தப் பட்டியலில் மேலும் ஒரு தேசிய விருது இணைந்துள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் தனித்துவமான அணுகுமுறையில் உருவான ‘கேப்டன் மில்லர்’, வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய கதைக்களம், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களால் கவனம் பெற்ற திரைப்படமாக அமைந்தது. தனுஷின் நடிப்பும் படத்தின் முக்கிய பலமாக பேசப்பட்டது.
இந்த நிலையில், திரைப்படத்திற்கான ரஜத் கமல் விருதை தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் பெற்றுக்கொண்டதும், தனுஷ் Special Mention தேசிய அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டதும், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் பயணத்தில் குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்துள்ளது.
மூன்று தலைமுறைகளாக திரைப்படத் தயாரிப்பில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சத்யஜோதி பிலிம்ஸுக்கு, இந்த விருது அதன் பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தும் மற்றுமொரு அங்கீகாரமாக அமைந்துள்ளது. காலம் மாறினாலும், வெவ்வேறு தலைமுறை ரசிகர்களை சென்றடையும் கதைகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பயணித்து வரும் நிறுவனத்தின் முயற்சிக்கு இந்த தேசிய விருது மேலும் ஒரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்காக கிடைத்துள்ள இந்த தேசிய அங்கீகாரத்திற்காக இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் தனுஷ், படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.
ஏழு தசாப்தங்களை நெருங்கும் சத்யஜோதி பிலிம்ஸின் திரைப்பயணத்தில், ‘கேப்டன் மில்லர்’ பெற்றுள்ள தேசிய விருது மற்றுமொரு பெருமைக்குரிய மைல்கல்லாக இணைந்துள்ளது.

Sathya Jyothi Films Returns to the National Awards Stage with ‘Captain Miller’; Producer T.G. Thyagarajan Receives the Honour
Another National Recognition in the Production House’s Nearly Seven-Decade-Long Cinematic Journey
Chennai: The National Film Awards ceremony, one of the highest honours in Indian cinema, was held today, with ‘Captain Miller’, produced by Sathya Jyothi Films and directed by Arun Matheswaran, receiving national recognition.
The film won the Rajat Kamal Award for Best Feature Film Promoting National, Social and Environmental Values. Producer T.G. Thyagarajan, representing Sathya Jyothi Films, received the award in person at the ceremony.
Adding to the celebrations, actor Dhanush received a Special Mention for his performance in ‘Captain Miller’. The recognition for both the production house and the lead actor at the same National Film Awards ceremony marked a significant moment for the entire team.
The National Award for ‘Captain Miller’ is not just a recognition for an individual film, but also adds another significant chapter to the long-standing cinematic journey of Sathya Jyothi Films, which has been creating films with a strong commitment to storytelling and filmmaking for several decades.
Sathya Jyothi Films’ association with Tamil cinema dates back to 1959, when the production house released ‘Kalyana Parisu’. Over the years, the banner has remained connected with several important phases of Tamil cinema and has also earned recognition at the national level.
‘Kalyana Parisu’ received national recognition as the Best Tamil Feature Film. Later, ‘Rickshawkaran’ earned actor M.G. Ramachandran the National Award for Best Actor. The production house subsequently witnessed another major milestone with ‘Moondram Pirai’, which won three National Film Awards and also brought actor Kamal Haasan his first National Award.
Continuing this legacy, Sathya Jyothi Films has consistently explored diverse subjects and stories that resonate with different generations of audiences. The banner’s ‘Viswasam’ also received national-level recognition, and now ‘Captain Miller’ has added another National Award to the production house’s distinguished journey.
Directed by Arun Matheswaran and starring Dhanush, ‘Captain Miller’ stood out for its period setting, distinctive storytelling, strong characters and technical execution. Dhanush’s performance was also widely noted as one of the film’s key strengths.
With T.G. Thyagarajan receiving the Rajat Kamal for the film and Dhanush receiving a Special Mention, the National Film Awards ceremony has become a memorable milestone in the journey of ‘Captain Miller’.
For Sathya Jyothi Films, which has continued its filmmaking journey across three generations, this recognition goes beyond the success of a single film. It represents another honour for a legacy built around the pursuit of quality cinema and stories that connect with audiences across generations.
Sathya Jyothi Films extended its gratitude and congratulations to director Arun Matheswaran, actor Dhanush, the entire cast, technicians and all members of the ‘Captain Miller’ team for this national recognition.
As Sathya Jyothi Films approaches seven decades of its cinematic journey, the National Award for ‘Captain Miller’ stands as another prestigious milestone in the production house’s illustrious legacy.
