கேப்டன் மில்லர்’ மூலம் மீண்டும் தேசிய விருது மேடையில் சத்யஜோதி பிலிம்ஸ் – டி.ஜி. தியாகராஜன் பெருமிதம்!
‘கேப்டன் மில்லர்’ மூலம் மீண்டும் தேசிய விருது மேடையில் சத்யஜோதி பிலிம்ஸ் – டி.ஜி. தியாகராஜன் பெருமிதம்!
ஏழு தசாப்தங்களாக தொடரும் திரைப்பயணத்தில் மற்றுமொரு தேசிய அங்கீகாரம்
சென்னை: இந்திய சினிமாவின் உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான ரஜத் கமல் விருது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் இந்த விருதை விழாவில் நேரில் பெற்றுக்கொண்டார்.
மேலும், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு Special Mentio...




