
சத்யா சிபிக்கு மிக பெரிய வெற்றியை கொடுக்க போகும் படம் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை இதுவரை இல்லாத சிபியை இந்த படத்தில் பார்க்கலாம். நடிப்பில் அந்த அளவுஅளவுக்கு ஒரு முன்னேற்றம் என்று தான் சொல்லணும். சத்யா தெலுங்கு ரீமேக் படம் தெலுங்கில் மிக பெரிய வெற்றி பெற்ற படம் இந்த படம் தமிழில் நிச்சயம் அதை விட ஒரு வெற்றியை காணும் என்பதில் ஐயம் இல்லை
படத்தின் முதல் காட்சியில் இருந்து படத்தை மிகவும் விறுவிறுப்பாக எடுத்து செல்கிறார் திரில்லர் படம் என்பதுக்கு இணைங்க முதல் காட்சியில் இருந்து செம திரில்லாக எடுத்து செல்கிறார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இவர் ஏற்கனவே விஜய் ஆன்டனியை வைத்து சைத்தான் படத்தை இயக்கியவர்
ஒரு நேரடி படத்தை இயக்குவதை விட ரீமேக் படம் இயக்கம் பொது மிக பெரிய பொறுப்பு இருக்கு அதை உணர்ந்து செயல்பட்டுள்ளார் என்று தான் சொல்லணும் தெலுங்கில் மிக பெரிய வெற்றி அதைவிட பெரிய வெற்றிக்கு பாடுபட்டுள்ளார் படத்துக்கு மிக பெரிய பலம் என்றால் அது திரைக்கதை அந்த திரைக்கதைக்கு ஏற்ப பின்னணி இசை மூலம் பலம் சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் கே எஸ் சைமன் அதேபோல ஒளிப்பதிவாளரும் தன பங்கை உணர்ந்து செயல்பட்டுள்ளார் என்று தான் சொல்லணும்.
சத்யா படத்தில் சிபி சத்யராஜ் நாயகனாக நாயகியாக ரம்யா நம்பீசன் படத்தின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி இவர்களுக்கு பலம் சேர்க்க ஆனந்த்ராஜ், யோகிபாபு,நிழல்கள்ரவி, சதீஷ் மற்றும் பலர் நடிப்பில் கே எஸ் சைமன் இசையில் அருண்மணி பழனி ஒளிப்பதிவில் மஹேஸ்வரி சத்யராஜ் தயாரிப்பில் பிரதீப் கிருஷ்ணாமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் சத்யா
படத்தின் கதையை பார்ப்போம் சிபிராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் இந்த இவர்களுக்குள் காதல் அதை பிடிக்காத அப்பா நிழல்கள் ரவி இருவரையும் பிரிக்கிறார் இதனால் மனம் உடைந்த சிபிராஜ் இந்தியா விட்டு ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்கு போகிறார். ஒரு நாள் திடீர் என்று ஒரு போன் ரம்யா நம்பீசன் பேசுகிறார் நான் உன்னை உடனே பார்க்கவேண்டும் இந்தியா வா என்கிறார் அனால் ரம்யாவுக்கு வேறு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
காதலி குரலை கேட்ட சிபி உடனே இந்தியா கிளம்பி வருகிறார். ராமாயாவையம் சந்திக்கிறார் அப்போது ராமயா எனது குழந்தையை யாரோ கடத்திவிட்டார்கள் நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று கெஞ்சுகிறார். சிபி என்னிடம் ஏன் சொல்ல்கிறாய் போலீஸ் மற்றும் உன் கணவரிடம் சொல்லு என்கிறார் அப்போது எல்லோரிடமும் சொல்லிவிட்டேன் யாரும் எனக்கு உதவி செய்யவில்லை என் குழந்தை காணாமல் போய் இரண்டு மாதங்கள் ஆகிறது எனக்கு யாரும் உதவி செய்யவில்லை உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்லை நீ தயவுசெய்து என் குழந்தையை கண்டுபிடுத்து கொடு என கெஞ்சுகிறாள் இந்த குழந்தையை கண்டுபிடிப்பது தான் மீதி கதை இதை மிகவும் விறுவிறுப்பாக படமாக்கியுள்ளார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணாமூர்த்தி
சிபிசத்யராஜ் நாயகனாக சும்மா முதல் முறையாக நேர்த்தியான நடிப்பில் களம் இறங்கியுள்ளார் கதைக்கு ஏற்ப முதல் முறையாக தன்னை தயார் செய்துள்ளார் புலிக்கு பிறந்தது புலி தான் என்பதை இந்த படம் மூலம் நிரூபித்துள்ளார் காதல் காட்சிகளிலும் சரி குழந்தையை தேட துப்பு துலக்கும் காட்சிகளில் மிக அற்புதமாக நடித்துள்ளார்.
நாயகி ரம்யா நம்பீசன் எப்பவும் போல நடிப்பில் சும்மா பின்னியுள்ளார் காதலிலும் சரி அதே போல தன குழந்தை காணும் என்ற தவிப்பை மிகவும் அழகாக தன நடிப்பு மூலம் வெளிப்படுத்தியுள்ளார் அதே போல காதல் காட்சிகளில் கொஞ்சம் தாராளமாக நடித்துள்ளார் படாதும் தன கதாபாத்திரத்துக்கும் மிக அழகாக வலுசேர்த்துள்ளார்.
படத்துக்கு மேலும் பலம் சேர்த்து இருப்பவர் வரலக்ஷ்மி படத்துக்கு படம் நாயகி என்பதை விட தான் நடிக்கும் கதாபாத்திரம் பேசப்படவேண்டும் என்பதில் குறிப்பாக இருக்கும் வரலக்ஷ்மி அதை இந்த படத்திலும் மிக நேர்த்தியாக செய்துள்ளார் தொடர்ந்து போலீஸ் கதாபாத்திரம் இதிலும் அதிலும் கொஞ்சம் வித்தியாசம் அதை மிக சிறப்பாக செய்துள்ளார்.
படத்தின் அடுத்த பலம் ஆனந்த்ராஜ் இன்ஸ்பெக்டராக வரும் ஆனந்த்ராஜ் கொஞ்சம் கலப்புவுடன் தன் கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக நடித்துள்ளார் பல இடங்களில் நம்மை ரசிக்கவைக்கிறார்
இதுவரை நகைசுவை கதாபாத்திரத்தில் வந்த சதீஷ் முதல் முறையாக குணசித்திர வேடத்தில் வந்து கதையின் திருப்புமுனையாக அமைக்கிறார் எனக்கு காமெடி மட்டும் இல்லை நடிப்பும் நல்ல வரும் என்று நிரூபித்துள்ளார் .
யோகி பாபு சொல்லவாவேனும் சிபியின் நண்பனாக வருகிறார் சிபியை அவர் கலைக்கும் காலாய் அரங்கமே திருக்கிறது சீரியஸான கதைக்கு மிக பெரிய ரிலேப் யோகிபாபு என்று தான் சொல்லணும்
இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி மிக சீரியஸான கதையை எடுத்துக்கொண்டு அதை மிகவும் அழகாக கையாண்டுள்ளார் என்று தான் சொல்லணும் தன முதல் காட்சியில் இருந்து கதையோடு பயணிக்க ஆரம்பித்துள்ளார் காதல் பாடல் என்று பிசுறு தட்டாமல் மிகவும் சிறப்பாகி இயக்கியுள்ளார் என்று தான் சொல்லணும் அதேபோல நடிகர் மற்றும் அனைவரையும் மிக நேர்த்தியாக வேலை வாங்கியுள்ளார் என்று தான் சொல்லணும்
இசை சைமன் படத்தின் கதையோட்டத்தை புரிந்து பின்னணி இசையை கொடுத்துள்ளார் பல இடங்களில் இசையின் மூலம் உயிக்கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும் அதே போல பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது.
உலக நாயகன் படத்தின் டைட்டில் வைத்து எங்கு சொதப்பி இருப்பார்களோ என்ற பயம் இல்லாமல் அவர் பெயரை காப்பாற்றியுள்ளனர் என்று தான் சொல்லணும்
மொத்தத்தில் சத்யா பேருக்கு ஏற்ப சத்தியம் Rank 3.5/5
