Saturday, February 15
Shadow

ஜூன் மாதம் வெளியாகும் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை

தமிழ் சினிமாவின் புதுமை இயக்குனர்கள் பட்டியல் மட்டும் இல்லாமல் முன்னணி இயக்குனர் பட்டியலும் இடம் பிடித்துள்ள இயக்குனர் என்றால் அது நிச்சயமாக சொல்லலாம் அது செல்வராகவனும் என்று ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் அவர் இயக்கம் படம் என்றால் அது நெஞ்சம் மறப்பதில்லை இந்த படத்துக்கு மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு உள்ள படம்.

இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்த படமும் இயக்காமல் இருந்த செல்வராகவன், தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அண்மையில் படத்தை தணிக்கை குழுவினருக்கு அனுப்பினர் படக்குழுவினர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் ஏ சான்றிதழ் கொடுத்தனர். இதனால் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பினர் படக்குழுவினர். மறுதணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்ததை தொடர்ந்து படத்தை வரும் ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். அநேகமாக ஜூன் 2 ஆம் தேதி வெளியாகலாம் என்கிறார்கள்.

இந்த படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் மதன் தயாரித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டதால் தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் செல்வராகவன்.

Leave a Reply