Sunday, December 8
Shadow

Tag: #Suriya

சூர்யா படத்திற்கு வித்தியாசமான பெயரை வைத்த செல்வராகவன்

சூர்யா படத்திற்கு வித்தியாசமான பெயரை வைத்த செல்வராகவன்

Latest News, Top Highlights
`தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நாயகிகளாக நடிக்கிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்திற்கு `என்.ஜி.கே' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செல்வராகவன் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சூர்யா, கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ போன்ற தோன்றத்தில் இருப்பது போன்று அந்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது. மேலும் போஸ்டரில் உரிமைக்காக ஒரு கூட்டம் போராடுவது போன்று உழைப்பாளர்களின் கைகள் ஓங்கியபடி போஸ்டர் வெளியாகி இருக்கிறத. எனவே சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ச...
சூர்யா படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட செல்வராகவன்

சூர்யா படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட செல்வராகவன்

Latest News, Top Highlights
`தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நாயகிகளாக நடிக்கிறார்கள். த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தஞ்சாவூர் பகுதிகளில் நடந்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் ஒன்றும் அமைக்கப்படுகிறது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற மார்ச் 5-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
சூர்யாவால் தடைபடும் படப்பிடிப்பு – படக்குழு புதிய யோசனை

சூர்யாவால் தடைபடும் படப்பிடிப்பு – படக்குழு புதிய யோசனை

Latest News, Top Highlights
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தஞ்சாவூர் பகுதிகளில் நடந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு தஞ்சாவூர் மற்றும் தென் தமிழகத்தில் நடத்தப்பட உள்ளதாம். அதற்கான படப்பிடிப்பு லொகேஷன்களை படக்குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர். அதிலும் ஆறு மற்றும் வயல்வெளி சூழந்த பகுதியில் படப்படிப்பை நடத்த செல்வராகவன் விருப்பம் தெரிவித்துள்னளாராம். ஆனால் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால், அங்கு மக்கள் கூட்டம் கூடி படப்பிடிப்பு தடைபட வாய்ப்பு இருப்பதால், செட் போட்டு படப்பிடிப்பு நடத்தலாம் என்று யோசனையில் படக்குழுனர் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். அதற்காக நெல்லை அருகில் இருக்கும் அம்பாசமுத்திரம் போன்று செட் ஒன்றும் போடப்பட்டு வருகிறதாம். அதற்காக கலை இயக்குநர் விஜய் முருகன் தலைமையில்...
வித்யா பாலன் படத்தில் ஜோதிகா

வித்யா பாலன் படத்தில் ஜோதிகா

Latest News, Top Highlights
சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா, ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் தனது ரீஎண்ட்ரி ஆனார். அந்தபடம் நல்ல வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து மகளிர் மட்டும் படத்திலும் நடித்தார். தற்போது ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடிக்கிறார். இந்நிலையில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகிய ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் படத்தின் கதையாகும். வித்யா பாலன் நடித்துள்ள வேடத்தில் ஜோதிகா நடிப்பார் என்றும், இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் பிரித்விராஜ், ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த...
சிங்கத்திற்குப் பிறந்தது பூனையாகுமா?

சிங்கத்திற்குப் பிறந்தது பூனையாகுமா?

Latest News, Top Highlights
சூர்யா-ஜோதிகா தம்பதியினர் நடிப்பில் தூள் கிளப்புவார்கள் என்பது அனைவரும் அறிந்த வி‌ஷயம். இவர்களுடைய மகள் தியா, மகன் தேவ் ஆகியோரும் நடிப்பில் அசத்துகிறார்கள் என்ற விவரம் இப்போது வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் பாடகி ஷாலினி குழந்தைகளுக்கான மேடை நிகழ்ச்சி நடத்தினார். இதில் சூர்யாவின் குழந்தைகள் 2 பேரும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில், சூர்யா மகன் தேவ் மேடை நடிகருடன் வாள் ஏந்தி சண்டை போடும் வீடியோ காட்சியும், புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. மகள் தியா மேடை நாடகத்தில் நடித்த புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இருவரும் முக பாவனைகளையும், உடல் அசைவுகளையும் அருமையாக வெளிப்படுத்தி இருப்பது இந்த வீடியோ, புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சூர்யா ரசிகர்கள் தியா, தேவ் நடித்த வீடியோவையும் புகைப் படங்களையும் இணைய தளங்களில் வெளியிட்டு சிங்கத்துக்கு, பிறந...
நடிகர் ஜெய்க்கு கைகொடுக்கும் சூர்யா

நடிகர் ஜெய்க்கு கைகொடுக்கும் சூர்யா

Latest News, Top Highlights
ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற 'பலூன்' படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக கலகலப்பு-2 படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், ஜெய் தற்போது வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கத்தில் 'ஜருகண்டி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். 'ஜருகண்டி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சில தினங்களுக்கு முன்பு பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரிலீஸ் செய்தார். இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட இருக்கிறார். வருகிற பிப்ரவரி 5-ம் தேதி மாலை 6 மணிக்கு டீசரை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் நடிக்கின்றார். ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய...
சூர்யாவுக்கு வில்லனான விஜய் பட வில்லன்

சூர்யாவுக்கு வில்லனான விஜய் பட வில்லன்

Latest News, Top Highlights
`தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் நாயகிகளாக ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நடிக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் துவங்கிய இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஜெகபதி பாபு நடிக்கிறார். இவர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது....
கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

Latest News, Top Highlights
`தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாயின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா, பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர். சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நேற்று முன்தினம் இந்த படத்திற்காக ரேக்ளா ரேஸ் நடப்பது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக நடிகர் சூர்யா தனது மகன் தேவுடன் தென்காசி சென்று கார்த்திக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அங்கு ரேக்ளா ரேஸ் பார்க்கும் வீடியோவையும், புகைப்படத்தையும் அவரது டு...
சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்

சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். அவர் நடிப்பில் கடந்த வருட இறுதியில் வெளிவந்த படம் ‘வேலைக்காரன்’. அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 86 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் தெலுங்கில் ‘வேலைக்காரன்’ வெளியாகவில்லை. இப்படம் தமிழகத்தில் ரூ 58 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ‘சிங்கம்-3’ வசூலை ‘வேலைக்காரன்’ முறியடித்துள்ளது, மேலும், ‘பைரவா’ தமிழக வசூல் ரூ 62 கோடி, ‘விவேகம்’ ரூ 66 கோடி என கூறப்படுகின்றது. ‘வேலைக்காரன்’ படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, நயன்தாரா நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது....
சூர்யாவின் சொடக்குக்கு வந்த சோதனை!

சூர்யாவின் சொடக்குக்கு வந்த சோதனை!

Latest News, Top Highlights
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கல் தின வெளியீடாக வந்தது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலில் வரும் அதிகார திமிர விரட்டி விரட்டி வெளுக்க தோணுது என்ற வரியை நீக்கக்கோரி சதீஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் ’சொடக்கு மேல சொடக்கு” பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....