
அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவ்ளோ தான் – கடுப்பில் சாய் பல்லவி.!
தமிழ் பெண்ணான சாய் பல்லவி மலையாள திரையுலகில் பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். பின்னர் தெலுங்கு படத்தில் நடித்து அங்கும் பிரபலமானார்.
இதனையடுத்து இவர் தற்போது ஏ.எல் விஜய் இயக்கத்தில் தமிழில் கரு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவிக்கு திருமணமான ரவி தேஜாவுக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு தகவலை யாரோ கிளப்பி விட அது தீயாக பரவியது.
இது குறித்து ரவி தேஜாவின் அப்பா சாய் பல்லவி வேகமாக வளர்ந்து வருவதால் அவர் மீது உள்ள பொறாமையால் இப்படியான வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என கூறியிருந்தார். இது போன்ற வதந்திகளால் சாய் பல்லவி மிகுந்த மன உளைச்சலில் உள்ளாராம். மேலும் இதை கிளப்பி விட்டது யார் என்பதையும் தேடி வருகிறாராம்.
...