
தில் பேச்சரா படத்தின் கதாநாயகியான சஞ்சனா சங்கி, அந்த படத்தில் வேலை செய்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புட் மற்றும் சஞ்சனா சங்கி நடித்த “தில் பேச்சரா” படம் ஜூலை 24ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த தில் பேச்சரா படம் கதாநாயகி சஞ்சனா சங்கிக்கு முதல் படமாக அமைந்துள்ளது. கதாநாயகி மட்டுமல்லாமல் இயக்குனரான முகேஷ் சாப்ராவிற்க்கும் இதுவே முதல் படம். சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் முகேஷ் சாப்ரா இருவரும் நல்ல நண்பர்கள். சுஷாந்த் சிங்கின் முதல் படத்திலிருந்தே இருவரும் ஒன்றாக வேலை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சனா சங்கியும் தன்னுடைய முதல் படத்திற்காக சுஷாந்த் சிங்கை முதன்முதலில் பட்டறையில் ஸ்கிரிப்டை படிக்கும்போதே பார்த்துள்ளார். கல்வி சாதனையாளர்களாந நடிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் சஞ்சனா சங்கி இருவருக்கும் கற்றல் மற்றும் புத்தகங்களின் மீதான தங்களுடைய அன்பினால் உடனடியாகவும், எளிதாகவும் அனைத்தையும் புரிந்து கொண்டனர்.
முதன்முதலில் பட்டறையில் ஸ்கிரிப்ட்டை படிக்கும் போது தங்கள் சந்தித்ததை பற்றி நடிகை சஞ்சனா விவரித்துள்ளார்: சுஷாந்த் சிங்குடன் சேர்ந்து நானும் ஸ்கிரிப்டை படித்துக்கொண்டிருந்தேன், எங்கள் இருவரின் ஸ்கிரிப்ட் காபிக்களும் ஏதோ பழைய நாவலை படிப்பது போன்று இருந்தது. மேலும் இது என்னுடைய முதல் படம் என்பதால், நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். என்னை பார்த்து என்னுடைய பதட்டத்தை புரிந்துகொண்ட முகேஷ் சாப்ரா அவர்கள் என்னை சிறிது ஓய்வு எடுக்கும்படி கூறினார். அதன்பின் நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து படித்தோம்.
கல்வி சாதனைகளையும் தாண்டி எங்கள் மூவருக்கும் சாப்பாட்டின் மேல் ஒரு அதீத காதல் இருந்தது. நாங்கள் மூவருமே கட்டுக்கடங்காத சாப்பாட்டு பிரியர்கள் என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் மூவரும் சாப்பாடு ஆர்டர் செய்து எடுத்துக்கொண்டு சென்று, எங்கள் டைனிங் டேபிளில் வைத்து…… அனைத்தையும் பரப்பிவிட்டு, சீக்கிரமாக சாப்பிட ஆரம்பித்து விடுவோம். சுஷாந்த் மற்றும் முகேஷ் இருவரும் என்னை கேலி செய்வார்கள் “எவ்வளவுதான் நீ சாப்பிடுவாய்” என்று அந்த அளவிற்கு நானும் சாப்பிடுவேன் அவர்களும் சாப்பிடுவார்கள். இது எங்களுக்கு உணவின் மீது உள்ள கட்டுக்கடங்காத காதல் என்று தான் கூற வேண்டும். என்று அவர்கள் மூவரைப் பற்றியும் தில் பேச்சரா படத்தின் கதாநாயகியான சஞ்சனா சங்கி தெரிவித்துள்ளார்.
டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் இம்மாதம் 15ம் தேதி வெளியாக உள்ள தில் பேச்சரா படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
