
தமிழ் சினிமாவின் சகலகலாவல்வன் என்றால் அது கமல் ஹாசன் தான் அந்த இடத்துக்கு பலர் ஆசை படுகிறார்கள் அந்த ஆசை என்பது திறமை கமல் தன திறமை மூலம் தான் உலக நாயகன் அதே போல ஆக ஆசை படும் சுருதிஹாசன் நடக்குமா
தற்போது நடிப்பில் பிசியாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், படத்துக்கு கதை எழுத இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘ எழுதுவது எனக்குப் பிடிக்கும். பாடல்களை நானே எழுதி இசை அமைக்கும் பழக்கம் எனக்கு இருக்கிறது. விமான பயணங்களின் போது குறுங்கவிதைகள் மற்றும் கதைகளையும் எழுதியிருக்கிறேன்.
அதன் அடிப்படையில் படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுத இருக்கிறேன். இது கொஞ்சம் ஸ்பெஷல் வேலைதான். இந்த வருடம் அதை செய்து முடிப்பேன். சமூக விழிப்புணர்ச்சிக்காக கடந்த வருடம் குறும்படம் ஒன்றைத் தயாரித்தேன். அடுத்ததாக சிறுபட்ஜெட் படங்களை எனது சொந்த பேனரில் வெளியிடும் திட்டம் இருக்கிறது.
’படத்தை இயக்கும் ஆசையில்லையா?’ என்று கேட்கிறார்கள். அது கஷ்டம். பெரிய பொறுப்பைக் கொண்ட வேலை அது. இருந்தாலும் வாய்ப்புக் கிடைத்தால் பண்ணுவேன். இப்போதைக்கு ஸ்கிரிப்ட் எழுதும் வேலையை செய்ய இருக்கிறேன்’ என்கிறார் ஸ்ருதி