சிங்கம் சீரிஸின் மூன்றாம் பாகம் அண்மையில் சூர்யா – ஹரி கூட்டணி வெளியாகியுள்ளது. முதல் இரு பாகங்களுக்கு வெற்றி படங்கள் என்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது இந்த படம் வெளியானதுயில் இருந்து தொடந்து வசூலில் சாதனை புரிந்து வருகிறது தமிழகம் மட்டும் இல்லாமல் ஆந்திராவில் மேலும் சாதனை கேரளாவில் விஜய் சாதனையை உடைத்தது, உலகெங்கும் வசூலில் சக்கை போடு போடுகிறது.
தமிழகத்தில் இப்படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. இதில் ஆச்சரியமில்லை. ஆனால் கேரளாவில் இப்படத்துக்கு எதிர்பார்த்ததை விடவும் பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. முதல்நாளில் இப்படம் கேரளாவில் ரூ. 2.32 கோடி வசூல் செய்துள்ளது. இது பைரவா (ரூ. 2.12) வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விஜய் கோட்டை கேரளாவை தகர்த்தெறிந்த சூர்யா என்று தான் சொல்லணும்.