Wednesday, June 24
Shadow

அட்டு ஃபிளாப் படங்களை கூட பிளாக்பஸ்டர் என்கிறார்கள்: சிம்பு குசும்பு

சும்மாவே சிம்பு அளப்பறி தாங்க முடியாது இப்ப மிக பெரிய வெற்றி வேற சொல்லா வேணும் இன்னும் ஆட்டம் தாங்கல தேவையில்லாம சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தான் ஆண்டி ன்னு சொல்லுவாங்க அது சரி என்று சொல்லுவாங்க அது போல தான் சிம்புவும் இப்ப சிவனேன்னு இருக்குற பயபுல்லையை எப்படி நோன்டுராறு பாருங்க .

அட்டு ஃபிளாப் படங்களை கூட பிளாக்பஸ்டர்கள் என்கிறார்கள் என நடிகர் சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியான 10 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளது.

ரிலீஸ் தேதி பல முறை தள்ளிப் போனாலும் தற்போது படம் ஹிட்டாகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு. மோடியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்கால் பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது சிம்பு படத்திற்கு நல்லதாகிவிட்டது. ஒரு படம் ஹிட்டானால் ஹிட், சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் என்பார்கள். இந்நிலையில் இது குறித்து சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
15220021_10154082029897895_8761464183594223828_n
அட்டு ஃபிளாப் படங்களையும் கூடத் தான் பிளாக்பஸ்டர்கள் என்கிறார்கள். அச்சம் என்பது மடமையடாவை எப்படி அழைப்பீர்கள்? முடிவை தெரிவிக்காமல் மகிழ்ச்சி என்று கூறுவது நல்லது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply