Sunday, June 7
Shadow

இரவு பகலாக அயராது உழைக்கும் சிலம்பரசன் TR! தீபாவளிக்கு ரசிகர்களுக்கு ‘அரசன்’ விருந்து படைக்க முழு வேகத்தில் பணிகள்!

இரவு பகலாக அயராது உழைக்கும் சிலம்பரசன் TR!
தீபாவளிக்கு ரசிகர்களுக்கு ‘அரசன்’ விருந்து படைக்க முழு வேகத்தில் பணிகள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சிலம்பரசன் TR, தனது அடுத்த படைப்பான ‘அரசன்’ திரைப்படத்தை தீபாவளி வெளியீடாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தீவிரமாக உழைத்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இரவு நேர படப்பிடிப்புகளில் இடைவிடாமல் கலந்து கொண்டு, படத்தின் பணிகள் திட்டமிட்டபடி முன்னேறுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவது திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கோவில்பட்டியில் நடைபெற்ற முதல் கட்டப் படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது சென்னையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சிலம்பரசன் TR உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டு தங்களது காட்சிகளை நிறைவு செய்து வருகின்றனர். அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்டமான அரங்க அமைப்புகளும் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் சிலம்பரசன் TR, “கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து இரவு நேர படப்பிடிப்பில் ஈடுபட்டு வருவதால், என்னுடைய சர்க்காடியன் ரிதம் (உயிரியல் சுழற்சி கடிகாரம்) பாதிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு, படத்திற்காக அவர் செலுத்தி வரும் அர்ப்பணிப்பையும், ரசிகர்களுக்கு சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற அவரது உறுதியையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ‘அரசன்’ திரைப்படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தை எதிர்வரும் தீபாவளி திருநாளில் உலகம் முழுவதும் வெளியிடும் நோக்கில் படக்குழு முழு வேகத்தில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சிலம்பரசன் TR-ன் இந்த விடாமுயற்சியும், படத்தின் மீது அவர் காட்டி வரும் அக்கறையும் ரசிகர்களிடையே ‘அரசன்’ திரைப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

Simbu’s Relentless Dedication for ‘Arasan’!
Working Day and Night to Deliver a Grand Diwali Treat for Fans

One of Tamil cinema’s leading stars, Silambarasan TR, is leaving no stone unturned to ensure that his upcoming film Arasan reaches audiences as a grand Diwali release. The actor has been continuously participating in night shoots for more than two months, demonstrating remarkable commitment and dedication to the project’s timely completion.

Directed by acclaimed filmmaker Vetrimaaran, Arasan has already emerged as one of the most anticipated Tamil films in production. Produced by Kalaipuli S. Thanu under the banner of V Creations, the film features an impressive ensemble cast including Priyanka Mohan, Ameer, Samuthirakani, Kishore, Andrea Jeremiah and several others in pivotal roles.

Following the successful completion of the first shooting schedule in Kovilpatti, the second schedule is currently progressing at a brisk pace in Chennai. Key cast members, including Silambarasan TR, are actively participating in the ongoing shoot. Reports suggest that a massive set has also been erected for the upcoming third schedule, which is expected to commence soon.

Meanwhile, Silambarasan TR recently shared an update on his social media page, revealing the intense efforts being put into the film. In his post, he stated, “For more than two months, we have been shooting continuously at night. As a result, my circadian rhythm (biological body clock) has been disrupted.”

The actor’s statement has been widely interpreted as a reflection of his unwavering commitment to the film and his determination to deliver a memorable cinematic experience for audiences. Fans have appreciated his dedication and expressed excitement about the project’s progress.

Sources close to the production indicate that all remaining shooting schedules and post-production work are being meticulously planned and executed to ensure the film is ready for release during the upcoming Diwali festival season. The production team is reportedly working round the clock to meet the target release date.

Silambarasan TR’s relentless efforts and wholehearted involvement in the project have further heightened expectations surrounding Arasan, making it one of the most eagerly awaited Tamil releases of the year.