
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக முக்கிய இடத்தை பிடித்த நடிகர் என்று சொன்னால் மிகையாகது அதுவும் முன்னணி நடிகர்கள் வரிசையில் அதாவது விஜய் அஜித் பட்டியலில் வந்தது தான் முக்கியம் காரணம் கடந்த இவரின் இரண்டு படங்களின் வசூல் தான் பல வருடமாக போராடும் அப்பா அண்ணன் உதவி இருந்தும் தனுஷால் முடியவில்லை அதே போல் சிம்பு வாழ் சாதிக்காத முடியாத இடத்தை பிடித்து விட்டார். நிச்சயம் பெருமை படவேண்டிய விஷயம் தானே அதனால் தான் என்னவோ அஜித்துடன் போட்டி போட தைரியமாக களம் இறங்க தயாராகிவிட்டார் போல இருக்கு .
ரெமோ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் பிரபல மலையாள ஸ்டார் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் சினேகா, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், தம்பி இராமையா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் சிவகார்த்திகேயன், சேரியை சேர்ந்த இளைஞராக நடிக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி விநாயகர் சதுர்த்தியில் வெளியாகும் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அஜித் நடித்துவரும் விவேகம் படமும் அதேநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேதியை மாற்றாமல் அதேநாளில் தனது படத்தை வெளியிட சிவகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாராம்.
