Monday, November 28
Shadow

 போலீஸ் வேடத்தில் சந்தானம் கலக்க போகும் ஓடி ஓடி உழைக்கனும்

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன்  தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “ ஒரு பக்க கதை “ படத்தை தயாரித்து வருகிறார்கள் அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.    தொடர்ந்து பிரபு தேவா நடிக்கும் “ எங்க மங் சங் “ படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.                                                                                                                                 தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் “ ஓடி ஓடி உழைக்கனும் “ படத்தையும்  தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகியாக அமோரா தஸ்தர்  நடிக்கிறார். மற்றும் யோகி பாபு நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி மதுசூதனராவ், மன்சூரலிகான், மயில்சாமி  இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள்  நடிக்கிறார்கள்.                                                            


படத்தின் படிப்பிடிப்பு விறு விருப்பாக நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகி வருகிறது. போலீஸ் வேடத்தில் சந்தானம் கலக்க இருக்கிறார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. 

Leave a Reply