Monday, July 13
Shadow

சிவகார்த்திகேயனுடன் இணையும் முன்னனி ஹீரோயின் யார் தெரியுமா

சிவகார்த்திகேயன் குறுகிய காலத்தில் தமிழ் சிநேமாவில்முக்கிய பங்கு வகித்தவர் என்று தான் சொல்லணும் இன்று அஜித் விஜய் அளவுக்கு தன் வளர்ச்சியை பெரிதாக்கியுள்ளார். இன்று இவருடன் பல நடிகைகள் நடிக்க போட்டி போடுகின்றனர் அந்த வகையில் இவர் K.S.ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதை உறுதியும் படுத்தியுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது

அதுமட்டுமில்லாமல் எம்.ராஜேஷ் இயக்கத்தில் காதல்-காமெடி கலந்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கால்ஷீட் குழப்பத்தால் சாய் பல்லவி நடிக்கவில்லை

இதனையடுத்து தற்போது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது, நயன்தாராவுடன் சிவா ஜோடி சேருவது இரண்டாவது முறையாகும்.

ஏற்கனவே நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்த வேலைக்காரன் படத்தில் அவருடைய கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை என விமர்சனம் எழுந்தது, இந்த படத்திலாவது விட்டதை பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.